இந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறை ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் அடுத்த மிகப்பெரிய இலக்கு கார்களை சொந்த பெயரில் தயாரித்து விற்பனை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் 2026 ஆம் ஆண்டின் முதற்பாதிக்குள் முதல் காரை வெளியிட திட்டமிட்டுள்ளது.
சீனாவின் செரி ஆட்டோமொபைல், BYD உட்பட பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது. மேலும், ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் தற்பொழுது சீனாவின் SAIC குழுமத்தின் எம்ஜி மோட்டாரில் தற்பொழுது 49 % பங்குககளை பெற்றுள்ள நிலையில், இந்திய-சீனா எல்லை பிரச்சனையின் காரணமாக தொடர்ந்து எஸ்ஏஐசி முதலீடுகளை மேற்கொள்ள இயலவில்லை.
JSW First Car
ஜேஎஸ்டபிள்யூ பிராண்டின் முதல் காரினை 2026 ஆம் ஆண்டின் துவக்க காலாண்டில் வெளியிட உள்ள நிலையில், முதற்கட்டமாக இதற்கான தொழிற்நுட்பங்களை மற்ற நிறுவனங்களிலிடமிருந்து பெற உள்ளது. பிறகு படிப்படியாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.
ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ், தனது முதல் உற்பத்தி ஆலையை மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைக்க இருக்கிறது. இந்த ஆலையில், ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் (NEV) தயாரிக்கப்படும். வருங்காலத்தில், டிரக்குகள் மற்றும் பேருந்துகளையும் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக CNBC TV18 பேட்டி மூலம் தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே, JV முறையில் எம்ஜி தனியாக செயல்பட்டாலும், அதற்கு வேறுபட்டதாக உருவாக்கப்பட உள்ள புதிய கார் ஆலையில் நுட்பங்களை நேரடியாக பெற்றுக் கொண்டு சொந்த பெயரில் காரை தயாரிக்கவே ஜேஎஸ்டபிள்யூ முடிவெடுத்துள்ளது.
முதற்கட்டமாக 2026 ஆம் ஆண்டில் மூன்று முதல் நான்கு மாடல்களும் 2027ல் மூன்று கார்களையும் வெளியிட திட்டமிட்டுள்ளது. முதலாண்டில் வரவுள்ள மாடல்கள் 20 லட்சத்துக்கும் கூடுதலான விலையில் வரக்கூடும், 2027ல் வரவுள்ள மாடல்கள் 10 லட்சம் விலைக்குள் வரக்கூடும்.
இந்நிலையில் சீனாவின் செரி ஆட்டோமொபைல் நிறுவனத்தில் Tiggo 8 எஸ்யூவி மாடலுக்கான டிசைனை இந்தியாவில் காப்புரிமை பெற்றுள்ளது. இதன் மூலம் ஜேஎஸ்டபிள்யூ திட்டமிட்டுள்ள முற்கட்ட அறிமுகத்திற்கு இணையாக பிரீமியம் வசதிகளை கொண்டுள்ளதால் அனேகமாக செரியின் நுட்பங்களை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கின்றேன், ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.