வர்த்தகரீதியான பயன்பாடுகளுக்கு காரன்ஸ் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் கியா நிறுவனத்தின் புதிய காரன்ஸ் கிளாவிஸ் இவி மாடலில் HTM என்ற வேரியண்ட் ரூ.18.19 லட்சத்தில் விற்பனைக்கு வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளது.
குறிப்பாக டாக்சி மற்றும் வணிக சேவைகளுக்கு பயன்படுத்தும் கார்களுக்கு ஏற்ற வகையில் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிமீ ஆக வரையறுக்கப்பட்டு ஜிபிஎஸ் டிராக்கருடன் பேனிக் பொத்தான் பெற்றதாகவும் வரவுள்ளது.
தற்பொழுது கிடைக்கின்ற பேஸ் HTK+ வேரியண்ட் அடிப்படையிலான அனைத்து வசதிகளையும் பகிர்ந்து கொள்ளும் என்பதனால் எல்இடி விளக்குகள், இரட்டை 12.3-இன்ச் டிஸ்பிளே மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்று கூடுதலாக கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளுடன் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் வரவுள்ளது.
ஏபிஎஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்டரோல், 6 ஏர்பேக்குகள், டயர் பிரெஷர் மானிட்டர், பிரேக் அசிஸ்ட் சிஸ்டம், மலை ஏற மற்றும் இறங்க உதவும் வசதி, அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், ரிவர்ஸ் சென்சார் உள்ளன.
விற்பனைக்கு அடுத்த ஒரு சில வாரங்களுக்குள் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஆரம்ப நிலை வேரியண்டை விட ரூ.30,000 வரை கூடுதலாக அமைந்துள்ளது.
source – teambhp