இந்தியாவில் கியா வெளியிட்ட எலக்ட்ரிக் எம்பிவி காரன்ஸ் கிளாவிஸ் EVயில் கூடுதலாக HTX E மற்றும் HTX E ER என இரு விதமான வேரியண்டுகள் முறையே ரூ.19.99 லட்சம் முதல் ரூ.21.99 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
42Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் 135Hp பவர் வெளிப்படுத்தும் நிலையில் டார்க் 255Nm வெளிப்படுத்தும் நிலையில் 404 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என சான்றிதழ் பெற்றுள்ளது. சார்ஜிங் நேரம் 11kw AC விரைவு சார்ஜர் மூலம் 10-100 % பெற 4 மணி நேரம் போதுமானதாகும்.
Extended Range எனப்படுகின்ற ER வேரியண்டில் உள்ள 51.4Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் 171hp பவர் வெளிப்படுத்தும் நிலையில் டார்க் 255Nm வெளிப்படுத்தும் நிலையில் 490 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என சான்றிதழ் பெற்றுள்ளது. சார்ஜிங் நேரம் 11kw AC விரைவு சார்ஜர் மூலம் 10-100 % பெற 4 மணி நேரம் 45 நிமிடங்கள் போதுமானதாகும்.
HTX E என்ற வேரியண்டில் கூடுதல் வசதிகளாக பேஸ் HTK+ மாடலின் வசதிகளுடன் பனோரமிக் சன்ரூஃப், 64-வண்ண சுற்றுப்புற விளக்குகள், லெதரெட் அப்ஹோல்ஸ்டரி, லெதரெட்-சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல், ஸ்டீயரிங் வீலுக்கான சாய்வு மற்றும் தொலைநோக்கி சரிசெய்தல், உள்ளிழுக்கக்கூடிய இருக்கை பின்புற மேசை, அனைத்து ஜன்னல்களுக்கும் குரல் மூலம் இயக்கப்படும் ஆட்டோ மேல்/கீழ் அம்சம், LED உட்புற விளக்குகள், ஒரு ஆண்டி-க்ளேர் உட்புற பின்புறக் காட்சி கண்ணாடி (IRVM) மற்றும் ஒரு காற்று சுத்திகரிப்பான்.
உட்புறம் டூயல் டோன் பழுப்பு மற்றும் கடற்படை நீல டேஸ்போர்டினை பெற்று அதே நேரத்தில் ER வகையில் 17-இன்ச் அலாய் வீல் பெறுகிறது.
Variant | Price (Ex-showroom) |
---|---|
HTK+ | Rs 17.99 lakh |
HTX E | Rs 19.99 lakh |
HTX E ER | Rs 21.99 lakh |
HTX | Rs 20.49 lakh |
HTX ER | Rs 22.49 lakh |
HTX+ ER | Rs 24.49 lakh |