வரும் மே 23 ஆம் தேதி கியா நிறுவனத்தின் புதிய காரன்ஸ் கிளாவிஸ் எம்பிவி ரக மாடலின் விலையை அறிவிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முந்தைய மாடலை விட கூடுதல் வசதிகளை கொண்டுள்ளதால் விலை ரூ.12 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்பொழுது சந்தையில் உள்ள காரென்ஸின் வசதிகளை பகிர்ந்து கொண்டாலும் டிசைன் உள்ளிட்ட சில இடங்களில் கூடுதல் மாற்றங்களும் வசதிகள் மற்றும் பாதுகாப்பில் மேம்பட்டதாக வந்துள்ள கிளாவிஸ் காரில் HTE, HTE(O), HTK, HTK+, HTK+(O), HTX, and HTX+ என 7 வேரியண்டுகளுடன் ADAS பெற்ற மாடலும் கிடைக்கலாம்.
Carens Clavis பற்றி சில முக்கிய தகவல்கள்
காரன்ஸ் ஒரு வேரியண்ட் மாடலாக சுருக்கப்பட்டுள்ளதால் வரவுள்ள கிளாவிஸ் ரூ.12 லட்சம் முதல் துவங்கி டாப் வேரியண்ட் ரூ.19 லட்சத்துக்குள் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று எஞ்சின் ஆப்ஷனை பெற உள்ளது.
6 மற்றும் 7 இருக்கைகளை பெற்றுள்ள கிளாவிஸ் காரின் இன்டீரியரில் மிகவும் சிறப்பான இடவசதியுடன் டேஸ்போர்டில் சமீபத்திய கியா கார்களில் இடம்பெற்று வருகின்ற டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என இரண்டும் ஒருங்கே இணைக்கப்பட்ட 26.62-இன்ச் பனோரமிக் டிஸ்ப்ளே அமைப்பினை பெற்றுள்ளது.
டூயல் பேன் பனரோமிக் சன்ரூஃப், 8-ஸ்பீக்கர் போஸ் ஆடியோ சிஸ்டம், முன் மற்றும் பின் பகுதிக்கான டேஸ்கேம், ஆம்பியன்ட் லைட்டிங், வென்டிலேட்டேட் இருக்கைகள் என பலவற்றை கொண்டுள்ளது. பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் 6 ஏர்பேக்குகளுடன் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டிட்டி கண்ட்ரோல் (ESC), VSM, BAS, HAC, DBC (டவுன்ஹில் பிரேக் கண்ட்ரோல்), ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரெஷர் மானிட்டர் உள்ளது. டாப் வேரியண்டில் லெவல் 2 ADAS இடம்பெற்றிருக்கும்.