சமீபத்தில் வெளியான கிளாவிஸ் எம்பிவி மாடலை தொடர்ந்து காரன்ஸ் காரில் ரூ.11,40,900 முதல் வரை ரூ.13,25,900 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் பிரீமியம் (O) என்ற ஒற்றை வேரியண்ட் மட்டும் கிடைக்கின்றது.
கியா இந்தியா வெளியிட்டுள்ள புதிய காரன்ஸ் கிளாவிஸ் அறிமுகத்திற்கு பிறகு முந்தைய காரன்ஸ் காரிலிருந்து 8 வேரியண்டுகள் விடுவிக்கப்பட்டு மேலும், முந்தைய வரிசையில் இருந்த டாப் வேரியண்ட் உட்பட பேஸ் வேரியண்ட் வரை நீக்கப்பட்டுள்ளது.
2025 Kia Carens onroad price
கியா காரன்ஸ் ஆன்ரோடு விலை 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஐஎம்டி மாடல் ரூ.15.75 லட்சத்திலும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற மாடல் ரூ.16.62 லட்சம் மற்றும் 1.5 லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின் மேனுவல் மாடல் ரூ.14.36 லட்சம் வரை அமைந்துள்ளது.
Variant | Ex-showroom Price | on-road Price |
Carens Premium (O) 1.5 NA 6MT | Rs 11,40,900 | Rs 14,35,876 |
Carens Premium (O) 1.5L Turbo 6iMT | Rs 12,64,900 | Rs 15,74,065 |
Carens Premium (O) 1.5 Diesel 6MT | Rs 13,25,900 | Rs 16,61,920 |
பிரீமியம் (O) வேரியண்டில் உள்ள முக்கிய வசதிகள் பின் வருமாறு;-
- பாதுகாப்பில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டிட்டி கண்ட்ரோல் (ESC), VSM, BAS, HAC, DBC (டவுன்ஹில் பிரேக் கண்ட்ரோல்), ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள், ஹைலைன் TPMS, ரியர் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரெஷர் மானிட்டர் உள்ளது.
- 8 அங்குல தொடுதிரை சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே
- 6 ஸ்பீக்கர்கள்
- கீலெஸ் என்ட்ரி
- 16 இன்ச் அலாய் வீல் அல்லது 15 இன்ச் அலாய் வீல்
- ரியர் வியூ கேமரா
இந்த மாடலுக்கு போட்டியாக சந்தையில் உள்ள மாருதி சுசூகி XL6, எர்டிகா ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.