Categories: Car News

முதல் நாளில் 1,822 முன்பதிவுகளை அள்ளிய கியா கார்னிவல்..!

2024 Kia Carnival car

கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே 1822 முன்பதிவுகளை கடந்துள்ள நிலையில் இந்த மாடலின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் ஒற்றை டீசல் இன்ஜின் ஆப்ஷனை மட்டும் பெறுகின்ற இந்த மாடலுக்கு முன்பதிவு கட்டணமாக ரூபாய் இரண்டு லட்சம் வசூலிக்கப்படுகின்றது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசர் மூலம் இரண்டு சன்ரூஃப், 12.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ADAS பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த மாடலுக்கு நேரடியாக இந்திய சந்தையில் எந்த மாடலும் போட்டியாக இல்லை என்றாலும் விலை ரூபாய் 50 முதல் 60 லட்சத்திற்குள் எதிர்பார்ப்பப்படுகின்றது அக்டோபர் மூன்றாம் தேதி இந்த மாடலின் விலையானது அறிவிக்கப்பட உள்ளது.