கியா நிறுவனம் ஏற்கனவே ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பை அறிவித்துள்ள நிலையில், சிறப்பு சலுகையாக பிராந்தியங்கள் வாரியான ஜிஎஸ்டிக்கு முந்தைய தள்ளுபடியை அறிவித்துள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டில் செல்டோஸ் கார்களுக்கு ரூ.2 லட்சமும், காரன்ஸ் கிளாவிஸ் மாடலுக்கு ரூ.1,55,650 ஆகவும் காரன்ஸ் மாடலுக்கு ரூ. 1.31 லட்சம் வரை கிடைக்க உள்ளது. இந்த தள்ளுபடி சலுகை செப்டம்பர் 22 வரை மட்டுமே.
Region / State | Seltos | Carens Clavis | Carens |
North | upto ₹ 175,000 | upto ₹ 145,500 | upto ₹ 126,500 |
East | upto ₹ 175,000 | upto ₹ 145,000 | upto ₹ 120,000 |
West | upto ₹ 175,000 | upto ₹ 145,500 | upto ₹ 126,500 |
AP & Telangana | upto ₹ 200,000 | upto ₹ 133,350 | upto ₹ 120,500 |
Kerala | upto ₹ 225,000 | upto ₹ 125,650 | upto ₹ 120,500 |
Tamil Nadu | upto ₹ 200,000 | upto ₹ 155,650 | upto ₹ 130,500 |
Karnataka | upto ₹ 210,000 | upto ₹ 88,650 | upto ₹ 110,500 |
இந்தச் சேமிப்பு, ஜிஎஸ்டிக்கு முந்தைய ₹58,000 வரையிலான சலுகைகள் மற்றும் ₹1.67 லட்சம் வரையிலான பண்டிகைக் கால சலுகைகளின் கலவையாகும். கியா இந்தியாவின் CSO திரு. ஜூன்சு சோவின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கை “இந்த சீசனை இன்னும் சிறப்பானதாக்குவது” மற்றும் வாடிக்கையாளர்கள் “தங்களுக்குப் பிடித்த கியாவை ஒப்பிடமுடியாத மதிப்புடன் வீட்டிற்கு எடுத்துச் செல்ல” அனுமதிப்பது பற்றியதாகும் என குறிப்பிட்டார்.