சூப்பர் கார் தயாரிப்பாளரான லம்போர்கினி வெளியிட்டுள்ள புதிய ஹூராகேன் எவோ RWD இந்திய சந்தையில் ரூ.3.22 கோடி விலையில் வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக இந்தியாவில் எவோ ஸ்பைடர் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.
ஆல் வீல் டிரைவ் பெற்ற மாடலை விட 33 கிலோ வரை எடை குறைவாக அமைந்துள்ள இந்த காரில் ஹூராகேன் எவோ மாடலில் உள்ள அதே V10 என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 610 ஹெச்பி பவர் மற்றும் 560 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 5.2 லிட்டர் வி10 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 8 வேக கியர்பாக்ஸ் உள்ளது. சிறப்பான டார்க் மேம்டுத்தும் வகையிலான அம்சத்துடன் கூடிய ரியர் வீல் டிரைவ் சிஸ்டத்தை பெற்றுள்ளது. இந்த சூப்பர் காரின் வேகம் மணிக்கு அதிகபட்சமாக 325 கிமீ வரை எட்டும் திறன் கொண்டதாக வரையறுக்கப்பட்டுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு அதிகபட்சமாக 3.3 விநாடிகள் எடுத்துக் கொள்கின்றது.
இந்த காரின் இன்டிரியரில் 8.4 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வந்துள்ளது. உயர்தரமான இருக்கைகள் உட்பட பல்வேறு ஆடம்பர வசதிகளை பெற்று விளங்குகின்றது.
லம்போர்கினி ஹூராகேன் EVO RWD காரின் விலை ரூ. 3.22 கோடி ஆகும்.