₹ 4.18 கோடியில் இந்தியாவில் லம்போர்கினி உரூஸ் S விற்பனைக்கு வந்தது

இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள லம்போர்கினி உரூஸ் S எஸ்யூவி விலை ₹ 4.18 கோடி என நிர்ணையிக்கப்பட்டுள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள உரூஸ் பெர்ஃபாமென்டி மாடலுடன் இந்த வேரியண்ட் விற்பனை செய்யப்பட உள்ளது.

Urus S காரில் 4.0-லிட்டர், ட்வின் டர்போ V8 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்ச குதிரைத்திறன் 657 bhp மற்றும் 890 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் எட்டு வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் நான்கு சக்கரங்களுக்கும் பவரை வழங்குகின்றது.

ஊரூஸ் S மணிக்கு அதிகபட்சமாக 305 கிமீ வேகம் பயணிக்கும் திறனுடன் 0-100 கிமீ வேகத்தை 3.5 வினாடிகளில் எட்டும், மேலும் இது பெர்ஃபார்மென்ட் வேரியண்டை விட 0.2 வினாடிகள் குறைவாகும்.

இந்த எஸ்யூவி காரில் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு டிரைவ் முறைகள் – ஸ்ட்ராடா, ஸ்போர்ட் மற்றும் கோர்சா – மூன்று ஆஃப்-ரோடு முறைகளுடன் (சபியா, நெவ் மற்றும் டெர்ரா) வந்துள்ளது.

Share