ரூ.15.49 லட்சம் விலையில் மஹிந்திரா XUV500 எஸ்யூவி மாடலின் பெட்ரோல் எஞ்சின் பெற்ற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
மஹிந்திரா XUV500 பெட்ரோல்
டீசல் எஞ்சின்களை மட்டுமே நம்பியிருந்த மஹிந்திரா , டாடா போன்ற நிறுவனங்கள் பெட்ரோல் கார் மீதான மோகம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், டாடாவை தொடர்ந்து மஹிந்திரா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற எக்ஸ்யூவி500 மாடலில் ” G AT ” என்ற ஒற்றை வேரியன்டில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் அரபு நாடுகளில் வெளியிடப்பட்ட பெட்ரோல் எஞ்சின் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், 2.2 லிட்டர் எம் -ஹாக் பெட்ரோல் எஞ்சின் 140 ஹெச்பி ஆற்றல் மற்றும் 320 என்எம் டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் ஏசியன் (AISIN) நிறுவனத்தின் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் வழங்கப்படவில்லை.
டீசல் மாடலில் உள்ள வசதிகள் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லாமல் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, க்ரூஸ் கன்ட்ரோல், புஸ் ஸ்டார்ட் பொத்தான் ஆகியவற்றுடன் ஏபிஎஸ், இபிடி, டூயல் காற்றுப்பை ஆகிய அடிப்படை பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ளது.
இந்நிறுவனத்தின் கேயூவி100 நெக்ஸ்ட் மாடலை தொடர்ந்து எக்ஸ்யூவி 500 மாடலில் பெட்ரோல் வந்துள்ளதால் மற்ற மாடல்களான ஸ்கார்பியோ, டியூவி 300 மற்றும் வரவுள்ள மஹிந்திரா யூ321 எம்பிவிஆகியவற்ற்றில் பெட்ரோல் எஞ்சின் இணைக்கப்பட உள்ளது.
மஹிந்திரா XUV500 பெட்ரோல் ரூ.15.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி). முதற்கட்டமாக முன்னணி நகரங்களில் பெட்ரோல் மாடல் கிடைக்க உள்ளது.