மஹிந்திரா நிறுவனம் தென் ஆப்பிரிக்காவில் வெளியிட்டுள்ள ஸ்கார்ப்பியோ-என் மாடலின் அடிப்படையிலான அட்வென்ச்சர் எடிசன் (Mahindra Scorpio-N Adventure ) இந்திய சந்தைக்கு வெளியிடுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளது.
தென் ஆப்பிரிக்கா சந்தையில் வெற்றிகரமாக 20 ஆண்டுகளை கடந்துள்ள மஹிந்திரா நிறுவனம் இதனை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ள சிறப்பு அட்வென்ச்சர் எடிசன் மாடல் முழுமையான ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
7 இருக்கை பெற்றுள்ள Z8 வேரியண்டில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்கார்ப்பியோ-என் அட்வென்ச்சரில் புதிய அலாய் வீல் பொருத்தப்பட்டு 265/60 R18 டயர் பயன்படுத்தப்பட்டு இரு பக்கத்திலும் ஸ்டீல் பம்பர் வழங்கப்பட்டுள்ளது. பம்பர் மட்டுமல்லாமல் சற்று உயர்த்தப்பட்ட மேம்பாடுகளை கொண்ட சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
முன்பக்க பம்பரில் டோ பார், மீட்பு கொக்கிகள், உயர்-லிஃப்ட் ஜாக்கிங் புள்ளிகள், துணை விளக்குகள் மற்றும் வின்ச் ஆகியவற்றைப் பெறுகிறது. மற்றபடி, முழுமையான கருப்பு நிறத்தை கொண்டு மேற்கூறை ரெயில் பெற்றுள்ளது.
மற்றபடி, பவர்டிரையின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லை. 2.2-லிட்டர் mHawk டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு 172 bhp மற்றும் 400 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடலில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் தென்ஆப்பிரிக்கா மாடல் பெற்றுள்ள நிலையில் 2WD அல்லது 4WD பெற்றிருந்தாலும், அட்வென்ச்சர் எடிசனில் shift-on-the-fly 4WD பெற்று கூடுதலாக டிராக்ஷன் மோடுகளில் normal, snow, mud & rut, sand ஆகியவற்றை பெற்றுள்ளது.
மஹிந்திரா ஸ்கார்பியோ-என் அட்வென்ச்சர் எடிஷனின் விலை R644,499 (தோராயமாக ரூ. 29.29 லட்சம்) ஆகும்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…