இன்றைக்கு மஹிந்திரா சக்கன் ஆலையில் 9,00,000 உற்பத்தி எண்ணிக்கை மஹிந்திரா ஸ்கார்பியோ எட்டியுள்ளது. கடந்த 2002 முதல் மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ காரை விற்பனை செய்து வருகின்றது.
சமீபத்தில் முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட ஸ்கார்பியோ-என் அறிமுகம் செய்யப்பட்ட பொழுதும் ஸ்கார்பியோ கிளாசிக் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
Mahindra Scorpio-N
ஜூன் 27, 2022 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ என், ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து சிறப்பான ஆர்டகளை பெற்றுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் விருப்பங்களில் 25 வகைகளைக் கொண்ட ஸ்கார்ப்பியோ N 2.0 Petrol Z2 MT வேரியண்ட் ஆரம்ப விலை ரூ.12.75 லட்சமாகவும், 2.2 டீசல் Z8L AT (4WD) வகைக்கு ரூ.24.05 லட்சமாகவும் உள்ளது. இந்த மாடல் Z2, Z4, Z6, Z8 மற்றும் Z8L என 5 வகையாக உள்ளது.
ஜூன் 1, 2023 அன்று, இரண்டு ஸ்கார்பியோ மாடல்களும் 117,000 கார்களுக்கான ஆர்டர் பேக்லாக் கொண்டிருந்தது. இந்நிறுவனத்தின் வெற்றிக்கு ஸ்கார்ப்பியோ தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகின்றது.