ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி தார் 5 டோர் கொண்ட மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என்ற செய்திக்கு முற்றுப்புள்ளி மஹிந்திரா வைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டு மட்டுமே அறிமுகம் செய்யப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
ஆனால், ஆகஸ்ட் 15, 2023-ல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள உள்ள கூட்டத்தில் புதிய மாடல் ஒன்றை வெளியிடுவது உறுதியாகியள்ளளது.
இந்த தலைப்பில் கருத்து தெரிவித்த மஹிந்திரா, சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கையில், “அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா தார் 5-டோர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் மஹிந்திரா நிகழ்வில் அறிமுகமாகும் என்று பல ஊடக அறிக்கைகளைக் குறிப்பிடுவதன் மூலம், நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். வெளியீடு இந்த ஆண்டு திட்டமிடப்படவில்லை.
சமீபத்தில் முடிவடைந்த காலாண்டு முடிவுகள் ஊடக உரையாடலின் போது, இந்தியாவில் தார் 5-டோரின் வெளியீடு 2024-ல் திட்டமிடப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தினோம்.
விற்பனையில் உள்ள தார் எஸ்யூவி அமோகமான வரவேற்பினை பெற்று முன்பதிவு எண்ணிக்கையில் அதிகப்படியான காத்திருப்பு காலத்தை பெற்றுள்ளது.