Automobile Tamilan

மஹிந்திரா தார் எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகமானது

mahindra thar.e suv

மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய தார் எலக்ட்ரிக் எஸ்யூவி 5 கதவுகளை பெற்ற வழக்கமான பாக்ஸ் டிசைன் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. BE மற்றும் XUV.e கார்களை தொடர்ந்து தற்பொழுது தார்.இ எஸ்யூவி வந்துள்ளது.

INGLO (INdia GLObal) பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள P1 ஸ்கேட்போர்டு அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. ICE தார் எஸ்யூவி கார் போல வடிவமைப்பினை கொண்டதாகும்.

Mahindra Thar.e

INGLO பிளாட்ஃபாரத்தின் தார்.இ காரின் வீல்பேஸ் 2,775மிமீ முதல் 2,975மிமீ வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. பாக்ஸி பரிமாணங்கள் மற்றும் ஸ்கொயர்-ஆஃப் ஃபெண்டர்கள் கொண்டதாக உள்ளது.

Thar.e கான்செப்ட் 5 கதவு அமைப்பில் வந்துள்ளது. விற்பனையில் கிடைக்கின்ற உற்பத்தி நிலை 3-கதவு கொண்டதை விட மிகப் பெரிதாக சற்று உள்ளது. லைஃப் ஸ்டைல் எஸ்யூவி பல்வேறு சிறப்புகளை கொண்டு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தார் எலக்ட்ரிக் எஸ்யூவி முகமானது செவ்வக கிரில்லில் அமைக்கப்பட்ட மற்றும் சதுர வடிவ எல்இடி ஹெட்லைட்  கொண்டுள்ளது,

மஹிந்திரா தார்.இ தவிர பொலிரோ.இ, ஸ்கார்பியோ.இ மற்றும் எக்ஸ்யூவி.e ஆகியவற்றில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வெளியாக உள்ளது. 2024 அக்டோபர் மாதம் முதல் பல்வேறு எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களை மஹிந்திரா நிறுவனம் வெளியிட உள்ளது.

Exit mobile version