Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

5 நாட்களில் 9,000 முன்பதிவுகளை பெற்ற தார் எஸ்யூவி

By MR.Durai
Last updated: 7,October 2020
Share
SHARE

49247 mahindra thar suv first look

இந்தியாவின் பிரசத்தி பெற்ற ஆஃப் ரோடர் எஸ்யூவி மஹிந்திரா தார் காருக்கான முன்பதிவு அக்டோபர் 2 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. ரூ.9.80 லட்சம் ஆரம்ப விலையில் துவங்குகின்ற தார் எஸ்யூவி அதிகபட்சமாக ரூ.13.75 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

தார் #1 எஸ்யூவி ஏலத்தில் விடப்பட்ட நிலையில் முதல் காரின் விலை ரூ.1.11 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அக்டோபர் 2 ஆம் தேதி வெளியிடப்பட்டு அன்றைய தினமே முன்பதிவு துவங்கப்பட்டது. தற்போது வரை 36,000 கூடுதலான விசாரிப்புகளுடன் 9,000க்கு கூடுதலான உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளது.

இது 226 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ்,  650 மிமீ  ஆழம் வரை நீர் நிரம்பி உள்ள இடங்களிலும், 41.8 டிகிரி அணுகுமுறை, 36.8 டிகிரி புறப்பாடு மற்றும் கோணங்களில் 27 டிகிரி வளைவு ஆகியவற்றில் பயணிக்கும் திறனை கொண்டுள்ளது.

தார் எஸ்யூவி காரில் இடம்பெற்றுள்ள 2.0 லிட்டர் Mstallion பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 5000 RPM-ல் 150 ஹெச்பி பவர் மற்றும் 1500-3000rpm-ல் 320 என்எம் டார்க் (ஆட்டோமேட்டிக்) மற்றும் 1250-3000rpm-ல் 300 என்எம் டார்க் (மேனுவல்) வெளிப்படுத்தும். 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.

அதிகபட்சமாக 3750 RPM -ல் 130 ஹெச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் திறனை 1600 – 2800 RPM -ல் வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.

மேலும் மஹிந்திரா தார் காரின் அனைத்து வேரியண்டிலும் மேனுவல் ஷிஃப்ட் 4×4 டிரான்ஸ்ஃபர் கேஸ் வழங்கப்பட்டுள்ளது.

web title : Mahindra Thar SUV booking crosses 9,000 units

citroen basalt x teased
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா
2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!
ரூ.10 லட்சத்தில் மாருதி சுசூகியின் புதிய எஸ்யூவி செப்டம்பர் 3ல் அறிமுகம்
TAGGED:Mahindra Thar
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்
Ather energy
2025 ஏதெர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Bajaj Freedom 125 cng
Bajaj
பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் விலை, மைலேஜ், சிறப்பு அம்சங்கள்
2025 Royal Enfield bullet 350 logo
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
சூப்பர் மீட்டியோர் 650
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved