கூடுதல் ஸ்டைலிஷ் மாற்றங்களை பெற்ற REVX பேட்ஜிங் பெற்றதாக வந்துள்ள XUV 3XO காம்பேக்ட் எஸ்யூவி மாடலின் அடிப்படையிலான வேரியண்டுகளை பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் என இரண்டு எஞ்சின் ஆப்ஷனில் மட்டுமே மஹிந்திரா விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
Mahindra XUV 3X0 REVX
தற்பொழுது சந்தையில் உள்ள எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ மாடலின் முன்பக்க கிரில் அமைப்பு மாற்றிமைக்கப்பட்டிருந்துப்பதுடன் REVX மாடலுக்கான பிரத்தியேகமான 5 விதமான நிறங்களை பெற்று டேங்கோ ரெட், எவரெஸ்ட் ஒயிட் மற்றும் கேலக்ஸி கிரே ஆகிய மூன்று நிறங்களை பெற்றவை கருப்பு கூரையைப் பெறுகின்றன, அதே நேரத்தில் நெபுலா ப்ளூ மற்றும் ஸ்டீல்த் பிளாக் என இரண்டும் சாம்பல் நிற மேற்கூரை கொண்டுள்ளது.
XUV 3XO REVX விலைப்பட்டியல் (ex‑showroom, இந்தியா)
RevX M (MT) – ₹8.94 லட்சம்
RevX M(O) (MT) – ₹9.44 லட்சம்
RevX A T-GDi (MT) – ₹11.79 லட்சம்
RevX A T-GDi (AT) – ₹12.99 லட்சம்
1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் TCMPFi அதிகபட்சமாக 111 hp , 200Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெறுகின்றது. இந்த மாடலின் மேனுவல் மைலேஜ் லிட்டருக்கு 18.89kmpl மற்றும் ஆட்டோமேட்டிக் மைலேஜ் 17.96kmpl ஆகும்.
1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் TGDi என்ஜின் அதிகபட்சமாக 131 hp , 230Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெறுகின்றது. இந்த மாடலின் மேனுவல் மைலேஜ் லிட்டருக்கு 18.2kmpl மற்றும் ஆட்டோமேட்டிக் மைலேஜ் 20.1kmpl ஆகும்.
குறிப்பாக வெளிப்புறத்தில் 16 அங்குல அலாய் வீல் மாறுபட்ட டிசைனை பெற்றதாக டாப் REVX A வேரியண்டில் அமைந்திருந்தாலும், பேஸ் REVX M வகைகளில் ஸ்டீல் வீல் உடன் வீல் கேப் உள்ளது. இன்டீரியரில் பனரோமிக் சன்ரூஃப் உட்பட பெரும்பாலான 10.25″ தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25″ டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 4-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், இரட்டை மண்டல ஏசி, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே, புஷ் பட்டன் ஸ்டார்ட், ஸ்டீயரிங் கண்ட்ரோல் சுவிட்சுகள் உள்ள நவீன அம்சங்களை டாப் வேரியண்டு கொண்டு லெதேரேட் இருக்கைகள், டூயல் டோன் தன்மையை வெளிப்படுத்துகின்றது.