மாருதி சுசூக்கி ஆல்ட்டோ K10 காரில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள்

மாருதியின் பிரசத்தி பெற்ற 1 லிட்டர் என்ஜின் கொண்ட மாருதி சுசூக்கி ஆல்ட்டோ K10 இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் உட்பட பல்வேறு அடிப்படை பாதுகாப்பு அம்சங்களை கொண்டு ரூபாய் 3.66 லட்சம் முதல் ரூபாய் 4.45 லட்சம் வரையிலான (டெல்லி விற்பனையக விலை ) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நடப்பு ஏப்ரல் மாதம் முதல் இந்திய சந்தையில் விற்பனை செய்யபடுகின்ற அனைத்து நான்கு சக்கரங்கள் பெற்ற வாகனங்களில் இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட வேண்டும் எனபது கட்டாயமாகும். மேலும் ஜூலை 1, 2019 முதல் கூடுதல் பாதுகாப்பு வசதிகளாக ஓட்டுநருக்கான ஏர்பேக், டிரைவர் மற்றும் உடன் பயணிப்பவருக்கான இருக்கை பட்டை அணிய வேண்டிய எச்சரிக்கை, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு அலர்ட் ஆகியவை நடைமுறைக்கு வரவுள்ளது.

மாருதி சுசூக்கி ஆல்ட்டோ K10

68பிஎஸ் குதிரைத்திறன் வெளிப்படுத்தும் 998சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 90என்எம் முறுக்கு விசை . இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷனிலும் கிடைக்கும்.

புதிதாக வெளியிடப்பட்டுள்ள மேம்பட்ட ஆல்ட்டோ கே10 காரில் இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக், ஓட்டுநருக்கான ஏர்பேக், டிரைவர் மற்றும் உடன் பயணிப்பவருக்கான இருக்கை பட்டை அணிய வேண்டிய எச்சரிக்கை, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு அலர்ட் மற்றும் ஆட்டோமொபைல் தொழிற்சாலை தரநிலை (Automotive Industry Standard -AIS ) 145 விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது புதிய மாருதி ஆல்ட்டோ கே10 காரின் விலை ரூபாய் 16,515 முதல் 26,946 வரை உயர்தப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 1, 2019 முதல் பாரத் கிராஷ் டெஸ்ட் விதிமுறை அமலுக்கு வரவுள்ளதால் மேலும் கூடுதலாக விலை அதிகரிக்கும்.