4 மீட்டருக்கு குறைந்த நீளம் கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரில் சிஎன்ஜி ஆப்ஷனலாக கொண்ட வேரியண்டுகளுக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூ.25,000 வசூலிக்கப்பட உள்ளது.
இந்த மாடலில் 1.5 லிட்டர் K15C பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட மாடலுக்கு போட்டியாக பல்வேறு கார்கள் உள்ள நிலையில், சிஎன்ஜி வெர்ஷன் பெற்ற உள்ள வேரியண்டுகளுக்கு நேரடியான போட்டியாளர்கள் இல்லை.
பிரெஸ்ஸா பெட்ரோல் மாடலுக்கும் சிஎன்ஜி மாடலுக்கும் தோற்ற அமைப்பு மற்றும் வசதிகளில் எந்தவொரு வித்தியாசமும் இருக்காது. S-CNG பேட்ஜ் மட்டுமே பெற்றிருக்கும் மற்றபடி சிஎன்ஜி எரிபொருள் டேங்க் சேர்ப்பதனால் குறைந்த பூட் ஸ்பேஸ் பெற்றிருக்கும்.
CNG வகை என்ஜின் LXI, VXI, ZXI மற்றும் ZXI+. என நான்கு டிரிம்களுடன் வழங்கப்படும். மிக முக்கிய அம்சமாக சிஎன்ஜி என்ஜினில் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் இடம்பெற உள்ளது. எனவே, புதிய மாருதி பிரெஸ்ஸா சிஎன்ஜி 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என இரு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வரவுள்ளது.
எம்பிவி ரக மாடல்களான எர்டிகா மற்றும் XL6 கார்களில் பயன்படுத்தப்பட்டு வரும் அதே K15C 1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் கொடுக்கப்படும், சிஎன்ஜி முறையில் 88 ஹெச்பி மற்றும் 122 என்எம் டார்க் வெளிப்படுத்தும். பெட்ரோல் எஞ்சின் 100 ஹெச்பி மற்றும் 136 என்எம் டார்க்கை வழங்கி வருகின்றது. பிரெஸ்ஸா சிஎன்ஜி 27 கிமீ ஒரு கிலோ எரிபொருளுக்கு வழங்கும்.
ரூ. 75,000/- வரை விலை கூடுதலாக அமையலாம். தற்பொழுது விற்பனையில் உள்ள பிரெஸ்ஸா பெட்ரோல் வேரியண்ட் ₹ 8.19 லட்சம் முதல் ₹ 13.99 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம் சென்னை)விற்பனை செய்யப்படுகின்றது.
பிரெஸ்ஸா சிஎன்ஜிக்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை, மற்றபடி டாடா நெக்ஸான், கியா சோனெட், ஹூண்டாய் வெனியூ மற்றும் XUV300 ஆகியவற்றை எதிர்கொள்ளும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…