வரும் 2025 செப்டம்பர் 3 ஆம் தேதி மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி இ-விட்டாரா (Maruti Suzuki e-Vitara) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனுடன் ஆல் வீல் டிரைவ் இந்தியாவில் வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
குஜராத் ஆலையில் தயாரிக்கப்படுகின்ற இ-விட்டாராவினை ஏற்கனவே சர்வதேச அளவில் சில நாடுகளில் சுசூகி நிறுவனம் விற்பனை செய்து வரும் நிலையில் இந்திய சந்தைக்கும் வரவுள்ளது.
Maruti e-vitara
இந்தியாவில் கிடைக்கின்ற க்ரெட்டா.இவி, கர்வ்.இவி உட்பட மஹிந்திரா பிஇ 6 உள்ளிட்ட மாடல்களுடன் ரூ.20 லட்சத்துக்கும் குறைவாக துவங்குகின்ற மற்ற பிரிவு எலக்ட்ரிக் கார்களையும் எதிர்கொள்ள உள்ளது.
WLTP சான்றிதழ் படி 344 கிமீ வெளிப்படுத்துகின்ற FWD வேரியண்ட் 49kwh பேட்டரி பெற்று 144 PS பவர் மற்றும் 189Nm டார்க் பெற்றுள்ளது. 7 kW AC சார்ஜருடன் 6.5 மணி நேரத்தில் 10 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக சார்ஜ் ஆகிறது, 11 kW சார்ஜருடன் 4.5 மணி நேரத்தில் சார்ஜ் ஆகும்.
அடுத்து, டாப் 61Kwh பேட்டரி பெறும் FWD வேரியண்ட் 174 PS பவர் மற்றும் 189Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் இதன் ரேஞ்ச் WLTP சான்றிதழ் படி 426 கிமீ எனவும் , AWD டிரைவ் பெற்ற மாடல் WLTP சான்றிதழில் 395கிமீ ரேஞ்ச் உறுதிப்படுத்தப்பட்டு 61 kWh பேட்டரி மாடல் 184 PS பவர் மற்றும் 300Nm டார்க் வெளிப்படுத்த டூயல் மோட்டாருடன் வரக்கூடும்.
7 kW AC சார்ஜருடன் 9 மணி நேரத்தில் 10 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக சார்ஜ் ஆகிறது, 11 kW சார்ஜருடன் 5.5 மணி நேரத்தில் சார்ஜ் ஆகிறது.
DC விரைவு சார்ஜரை கொண்டு 10-100% பெற 45 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். ஆனால் இ விட்டாராவின் ஆல் வீல் டிரைவ் கொண்ட வேரியண்ட் இந்திய சந்தைக்கு மிகவும் தாமதமாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பாதுகாப்பு சார்ந்தவற்றில் 7 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர், 360-டிகிரி கேமரா, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குடன் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்குடன் ஆட்டோ ஹோல்டு வசதியும் உள்ளது.