இங்கிலாந்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள சுசூகி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார் மாடலான e விட்டாரா இந்தியாவில் உள்ள குஜராத் சுசூகி ஆலையில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு £29,999 முதல் £37,799 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் இந்திய சந்தையில் செப்டம்பரில் விற்பனைக்கு வரவுள்ள காரின் விலை ரூ.16 முதல் 17 லட்சம் ஆரம்ப விலையில் துவங்குலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இ விட்டாரா காரில் பொருத்தப்பட்டுள்ள 49kWh மற்றும் 61kWh பேட்டரி ஆப்ஷனை பெற்றுள்ளது.
FWD வேரியண்ட் 49kwh பேட்டரி பெற்று 144 PS பவர் மற்றும் 189Nm டார்க் வெளிப்படுத்தும், 61Kwh பேட்டரி பெறும் FWD வேரியண்ட் 174 PS பவர் மற்றும் 189Nm டார்க் வெளிப்படுத்தும், AWD டிரைவ் பெற்ற 61 kWh பேட்டரி மாடல் 184 PS பவர் மற்றும் 300Nm டார்க் வெளிப்படுத்த டூயல் மோட்டாருடன் வரக்கூடும். ஆனால் இ விட்டாராவின் ஆல் வீல் டிரைவ் கொண்ட வேரியண்ட் இந்திய சந்தைக்கு மிகவும் தாமதமாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் இந்திய சந்தைக்கு வெளியிடப்பட உள்ள மாடலின் இ விட்டாரா காரின் ரேஞ்ச் தொடர்பான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.