லிட்டருக்கு 24 கிமீ.., டாக்சி சந்தைக்கு மாருதி சுசுகியின் எர்டிகா டூர் M டீசல் விற்பனைக்கு வெளியானது

மாருதி எர்டிகா

பெட்ரோல், சிஎன்ஜி வேரியண்டை தொடர்ந்து தற்பொழுது DDiS 225 டீசல் என்ஜின் பெற்ற மாருதி எர்டிகா டூர் M விற்பனைக்கு 9 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய்  விலையில் வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் டூர் எம் மாடலில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வெளியானது.

டீசல் வேரியண்டில் பிஎஸ் 4 மாசு உமிழ்வுக்கு இணையான 95 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் DDiS 225 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச டார்க் 225 என்எம் ஆகும். இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ஃபிளீட் மற்றும் கேப் ஆப்ரேட்டர்களுக்கு ஏற்ற மாடல் என்பதனால் 80 கிமீ வேகமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த காரின் மைலேஜ் லிட்டருக்கு 24.20 கிமீ ஆகும்.

எர்டிகா எம்பிவி ரக காரில் டூர் எம் விற்பனைக்கு 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பெற்றதாக வந்துள்ளது. லிட்டருக்கு 18.18 கிமீ மைலேஜ் தரக்கூடியதாக ஆராய் சான்றளிக்கப்பட்ட 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 105hp பவர் மற்றும் 138Nm டார்க் வழங்குகின்றது. இந்த என்ஜினில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. விற்பனையில் உள்ள எர்டிகா VXi வேரியன்டினை பின்பற்றி வந்துள்ள டூர் எம் காரில் முன் மற்றும் பின் கதவுகளுக்கு பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங், எலக்ட்ரிக் முறையில் இயங்கும் ORVMs, இரு காற்றுப்பை, ரியர் பார்க்கிங் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

இன்டிரியரில் ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டு எம்பி3, யூஎஸ்பி மற்றும் ப்ளூடூத் போன்றவை இணைக்கப்பட்டு, அடுத்தப்படியாக ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு பொத்தான் வழங்கப்பட்டுள்ளது.

(எக்ஸ்ஷோரூம் டெல்லி)

Exit mobile version