Automobile Tamilan

மாருதி சுசூகி ஜிம்னி எஸ்யூவி ஆன்-ரோடு விலை பட்டியல்

Maruti Suzuki Jimny SUV

இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள லைஃப்ஸ்டைல் எஸ்யூவி மாருதி சுசூகி ஜிம்னி எஸ்யூவி காரின் என்ஜின் வேரியண்ட் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்.

ஜிம்னி எஸ்யூவி கார் 5 கதவுகளை பெற்று ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் என்ஜின் கொண்டுள்ள ஜிம்னி காரில் இரண்டு விதமான வேரியண்ட் உள்ளது.

Maruti Suzuki Jimny

கிரானைட் கிரே, பேர்ல் ஆர்க்டிக் ஒயிட், நெக்ஸா ப்ளூ, ப்ளூயிஷ் பிளாக், சிஸ்லிங் ரெட் உடன் கருப்பு நிற ரூஃப் மற்றும் கைனெடிக் மஞ்சள் உடன் பிளாக் ரூஃப் என மொத்தமாக 7 நிறங்களில் இரண்டு டூயல் டோன் கொண்டுள்ளது.

Jimny Zeta 1.5-litre petrol MT/AT 

Jimny Alpha 1.5-litre petrol MT/AT

ஜெட்டா வேரியண்டில் உள்ள வசதிகளுடன் கூடுதலாக அல்லது மாறுபட்ட வசதிகள்

1.5-லிட்டர் K15B பெட்ரோல் என்ஜின் மைல்டு ஹைபிரிட் வசதி கொண்டதாக பொருத்தப்பட்டு, 6000 RPM-ல் அதிகபட்ச பவர் 105 hp மற்றும் 134 Nm டார்க் 4000 RPM-ல் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் என இருவிதமான கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.

சுசூகி AllGrip Pro 4WD சிஸ்டத்துடன் மேனுவல் டிரான்ஸ்ஃபர் கேஸ் மற்றும் ‘2WD-high’, ‘4WD-high’ மற்றும் ‘4WD-low’ மோடுகளுடன் குறைந்த ரேஞ்ச் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

Maruti Jimny on-Road Price list in Tamil Nadu

மாருதி ஜிம்னி விலை ரூ.12.74 லட்சம் முதல் ரூ.15.05 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேனுவல் வேரியண்ட் மைலேஜ் 16.94 Kmpl மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் 16.39 Kmpl வழங்கும் என ARAI சான்றளித்துள்ளது.

MARUTI JIMNY on-Road PRICE
Variant Price
Zeta MT ₹ 15,50,710
Alpha MT ₹ 16,64,356
Alpha MT dual-tone ₹ 16,83,987
Zeta AT ₹ 16,94,238
Alpha AT ₹ 18,08,045
Alpha AT dual-tone ₹ 18,31,289

(கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் விலை தோராயமானதாகும், டீலர்களுக்கு டீலர் சிறிய அளவில் மட்டும் விலை வித்தியாசம் இருக்கலாம்.)

Exit mobile version