மாருதி சுசூகியின் அரினா டீலர்கள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ள புதிய எஸ்யூவி Victoris என அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் க்ரெட்டா உள்ளிட்ட எஸ்யூவிகளுக்கு கடும் சவாலினை ஏற்படுத்துவதுடன் பிரெஸ்ஸா மற்றும் கிராண்ட் விட்டாரா என இரு மாடல்களுக்கு இடையில் நிலை நிறுத்தப்பட உள்ளது.
வெளியடப்படுள்ள டீசரில் எல்இடி டெயில் விளக்கு சிக்யூன்சியல் முறையில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் விக்டோரிஸில் 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் எஞ்சினை எதிர்பார்க்கப்படுவதனால், மிக சிறப்பான மைலேஜ் வெளிப்படுத்தலாம். குறிப்பாக சிஎன்ஜி ஆப்ஷனை பெற உள்ள இந்த புதிய எஸ்யூவி பின்புற பூட்ஸ்பேஸ் வழங்கும் வகையில் சிஎன்ஜி டேங்க் ஆனது அடிப்பகுதியில் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்டீரியரில் கிராண்ட் விட்டாராவை போல 9 அங்குல ஸ்மார்ட்பிளே ப்ரோ+ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே இணைப்பு ஆகியவற்றை பெறக்கூடும்.
செப்டம்பர் 3ஆம் தேதி விக்டோரிஸ் விலை ரூ.10 லட்சத்தில் துவங்கப்படலாம் என கூறப்படுகின்றது.