இந்தியாவின் முதன்மையான தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிய விக்டோரிஸ் எஸ்யூவி குளோபல் NCAP மையத்தால் சோதனை செய்யப்பட்டு 5 நட்சத்திர பாதுகாப்பினை வயதுவந்தோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெற்றுள்ளது.
வயது வந்தோர் பாதுகாப்பில் பெற வேண்டிய 34 புள்ளிகளுக்கு 33.72 புள்ளிகளையும், குழந்தைகள் பாதுகாப்பில் பெற வேண்டிய 49 புள்ளிகளுக்கு 41 புள்ளிகள் பெற்றுள்ளதாக GNCAP அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
முன்பாக அறிமுகத்தின் பொழுது விக்டோரிஸ் மாடல் பாரத் NCAPல் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றிருந்தது. இப்பொழுது கூடுதலாக சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளதால் குளோபல் NCAP சோதனை முடிவுகளும் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. முன்பாக மாருதியின் டிசையர் 5 நட்சத்திரத்தை பெற்றிருந்தது.
மாருதி சுசுகி விக்டோரிஸ் GNCAP அறிக்கையின் முக்கிய முடிவுகள்
- ஆறு ஏர்பேக்குகள், ESC (எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல்) மற்றும் பாதசாரி பாதுகாப்பு ஆகியவற்றை பெற்றுள்ள நிலையில் டாப் மாடலில் கூடுதலாக ADAS தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.
- கட்டமைப்பு மற்றும் கால் பகுதிகள் நிலையானவை என மதிப்பிடப்பட்டு மேலும் சுமைகளைத் தாங்கும் திறனுடன் உள்ளது.
- அனைத்து இருக்கை நிலைகளிலும் மூன்று புள்ளி பெல்ட்கள் மற்றும் தரநிலையாக i-சைஸ் நங்கூரங்களுடன் வழங்கப்படுகிறது.
- வயது வந்தோருக்கான அனைத்து உடல் பகுதிகளும் அனைத்து விபத்து சோதனை சூழ்நிலைகளிலும் போதுமான அளவு நல்ல பாதுகாப்பை பெறுகின்றது.
- பக்கவாட்டில் ஈடுபடுத்தப்பட்ட கம்பத்தை மோதிய சோதனையில் முழு தலை, வயிறு மற்றும் இடுப்புக்கு பாதுகாப்பை வழங்குகின்றது.
- பதினெட்டு மாத மற்றும் மூன்று வயது குழந்தை டம்மிகள் ISOFIX நங்கூரங்கள் மற்றும் ஆதரவு காலுடன் பின்புறம் எதிர்கொள்ளும் குழந்தை இருக்கையில் முழு பாதுகாப்பை கொண்டுள்ளது.