• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

முதல்முறையாக மாருதி சுசுகி XL6 காரின் டீசர் வெளியானது

by MR.Durai
2 August 2019, 12:42 pm
in Car News
0
ShareTweetSend

Maruti Suzuki XL6 teased

6 சீட்டர் மாடலாக விற்பனைக்கு எர்டிகா அடிப்படையில் வரவிருக்கும் எக்ஸ்எல்6 (XL6) கார் அறிமுகம் குறித்தான முதல் டீசரை மாருதி சுசுகி வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் நெக்ஸா பிரீமியம் ஷோரூம்களில் விற்பனை செய்யப்பட உள்ள எக்ஸ்எல் 6 காரில் 1.5 லிட்டர் ஸ்மார்ட் ஹைபிரிட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற பிரபலமான எம்பிவி ரக மாடலான எர்டிகா காரை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல் கூடுதலான பிரீமியம் அம்சத்தை பெற உள்ளதால் சாதாரண எர்டிகாவை விட ரூ.40,000 விலை கூடுதலாக அமைந்திருக்கலாம்.

மூன்று வரிசை இருக்கை பெற உள்ள எக்ஸ்எல் 6 காரில் இரண்டு கேப்டன் இருக்கைகளை இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசைகளில் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சாதாரண எர்டிகா காரை விட மிகவும் ஸ்டைலிஷான மற்றும் முரட்டு தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்க உள்ள மாருதி சுசுகி XL6 காரில் மிக நேர்த்தியான எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள், பாடி கிளாடிங் உள்ளிட்ட வசதிகள் சேர்க்கப்படுவதனால் காரின் தோற்றம் கவனத்தைப் பெறுகின்றது.

கருப்பு நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இன்டிரியரில் மாருதியின் ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டிருப்பதுடன், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளை கொண்டதாக அமைந்திருக்கும். கூடுதலாக இந்த காரில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, லெதர் இருக்கைகள், மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவற்றை பெற்றிருக்கும்.

மாருதியின் XL6 காரில் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான 1.5 லிட்டர் ஸ்மார்ட் ஹைபிரிட் SHVS பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 4 வேக டார் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் மற்றும் 5 மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்க உள்ளது.

அடுத்த சில நாட்களில் பெரும்பாலான டீலர்களில் மாருதி சுசுகி XL6 காருக்கான முன்பதிவு தொடங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. முன்பதிவிற்கான கட்டணம் 25 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படலாம்.

Tags: Maruti Suzuki XL6
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version