Categories: Car News

ஸ்விஃப்ட் சிஎன்ஜி vs கிராண்ட் i10, டியாகோ ஒப்பீடு – எந்த சிஎன்ஜி கார் வாங்கலாம்.!

maruti swift cng vs hyundaigrand i10 nios vs tata tiago

இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜி மாடல்ளில் ஒன்றான புதிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் போட்டியாளர்களான ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ், டாடா டியாகோ என இரண்டும் நேரடியாக எதிர்கொள்ளுகின்றது. இதுதவிர மாருதியின் வேகன்ஆர், ஃபிரான்க்ஸ் போன்ற மாடல்களும் உள்ளன.

சிஎன்ஜி சிலிண்டர், பூட் ஸ்பேஸ்

டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் நிறுவனம் போல மாருதி இரட்டை சிலிண்டர் வழங்கவில்லை ஒற்றை சிலிண்டர் மட்டுமே வழங்கியுள்ளதால் பூட்ஸ்பேஸ் பெரிதாக இருக்காது. ஆனால் முதன்முறையாக டாடா தனது ட்வீன் சிலிண்டர் நுட்பத்தால் பூட்ஸ்பேஸ் அளவில் எந்த சமரசமும் செய்துக் கொள்ளவில்லை. அதை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனமும் டூயல் சிலிண்டர் நுட்பத்தை கொண்டு வந்திருக்கின்றது.

ஹூண்டாய் மற்றும் மாருதி என இரு நிறுவனமும் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் வழங்கும் நிலையில் டாடா மோட்டார்ஸ் சிஎன்ஜி காரிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்குகின்றது.

பூட்ஸ்பேஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் என இரண்டிலும் டாடா மோட்டார்ஸ் முன்னிலை வகிக்கின்றது.

எஞ்சின் ஒப்பீடு, மைலேஜ் விபரம்

1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் Z12E எஞ்சினை பெறுகின்ற ஸ்விஃப்ட் காரின் பவர் 69.75PS மற்றும் 101.8Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

1.2 லிட்டர் 4 சிலிண்டர் என்ஜின் கொண்ட கிராண்ட் ஐ10 நியோஸ் சிஎன்ஜி ஆப்ஷனில் 6000rpm-ல் 69 ps பவர் மற்றும் 4000rpm-ல் 95.2 Nm டார்க் வழங்கும். 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது.

1.2 லிட்டர் டாடா டியாகோ சிஎன்ஜி பயன்முறையில் கிடைக்கும் பொழுது, 73.4ps மற்றும் 95Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் உள்ளது.

அடுத்து மைலேஜ் விபரங்களை தொடர்ந்து அறியலாம்..

  • 2024 மாருதி ஸ்விஃப்ட் சிஎன்ஜி 32.85km/kg மைலேஜ் வழங்கும்
  • ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் மைலேஜ் 27.0km/kg
  • டாடா டியாகோ MT CNG மைலேஜ்  26.49Km/kg
  • டியாகோ ஏஎம்டி சிஎன்ஜி மைலேஜ் 28.06km/kg

குறிப்பாக ஹூண்டாய் மற்றும் மாருதி தனது கார்களில் 6 ஏர்பேக்குகளை வழங்கி வரும் நிலையில் டாடா டியாகோ மாடலில் இரண்டு ஏர்பேக்குகள் மட்டும் வழங்குகின்றது.

Maruti Swift CNG Vs Hyundai Grand i10 CNG Nios Vs Tata Tiago CNG price

  • 2024 மாருதி ஸ்விஃப்ட் சிஎன்ஜி விலை ரூ.8.20 லட்சம் முதல் ரூ.9.20 லட்சம் வரை மூன்று வேரியண்டில் உள்ளது.
  • ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் விலை ரூ.7.68 லட்சம் முதல் ரூ.8.23 லட்சம் வரை உள்ளது.
  • டாடா டியாகோ மேனுவல் விலை ரூ. 6.00 லட்சம் முதல் ரூ. 8.00 லட்சம் வரை சுமார் 8 வேரியண்டில் உள்ளது.
  • டாடா டியாகோ ஏஎம்டி விலை ரூ. 7.65 லட்சம் முதல் ரூ. 8.65 லட்சம் வரை உள்ளது.

(அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை)