Automobile Tamilan

7 சீட்டர் காராக வலம் வர தயாராகும் மாருதியின் சோலியோ கார்

d348e 2019 maruti suzuki wagon r

நாட்டின் முதன்மையான மாருதி சுசுகி நிறுவனம், தனது வேகன் ஆர் காரின் அடிப்படையிலான 7 இருக்கை காரை மாருதி சுசுகி சோலியோ (Maruti Suzuki Solio) என்ற பெயரில் ஜூன் மாதம் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

7 இருக்கை கொண்ட மாடல் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் பல்வேறு வசதிகளை பெற்ற MPV ரக கார் மாடலாக மாருதி நெக்ஸா ஷோரூம்களில் ஜூன் மாதம் முதல் விற்பனைக்கு வெளியிட வாய்ப்புள்ளதாக என்டிடிவி ஆட்டோ செய்தி வெளியிட்டுள்ளது.

மாருதி சுசுகி சோலியோ

மாருதியின் பிரீமியம் நெக்ஸா ஷோரூம் மூலம் விற்பனைக்கு வரவுள்ள 7 இருக்கை பெற்ற வேகன் ஆர் காரின் பெயர் சோலியோ அல்லது மற்றொரு பெயரில் விற்பனைக்கு ஜூன் மாத இறுதியில் வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது. தற்போது இந்தியாவில் கிடைக்கின்ற குறைந்த விலை 7 இருக்கை மாடலான டட்சன்  கோ பிளஸ் மற்றும் இந்தியாவில் விரைவில் வெளியிடப்பட உள்ள ரெனோ ட்ரைபர் போன்ற மாடல்களுக்கு சவாலாக விளங்க உள்ளது.

விற்பனையில் உள்ள காரினை விட கூடுதலாக வீல் பேஸ் அதிகரிக்கப்பட்டு மூன்றாவது வரிசை இருக்கை இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம் தாராளமான இடவசதி வழங்கும் வகையில் அமைந்திருக்கும். தற்போது வேகன்ஆரில் உள்ள K12M என்ஜினை பகிர்ந்து கொள்ள உள்ள இந்த காரில் குதிரைத்திறன் 82 BHP மற்றும் முறுக்குவிசை 113 Nm ஆக இருக்கும். இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன் வழங்கப்படலாம்.

மாருதியின் புதிய சோலியோ காரினை பற்றி மேலதிக விபரங்கள் அடுத்த சில வாரங்களில் வெளிவர வாய்ப்புகள் உள்ளது.

Exit mobile version