இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய மெர்சிடிஸ் AMG G63 கிராண்ட் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு ரூ 4 கோடி விலையில் அறிமுகம் செய்துள்ளது.
மெர்சிடிஸ் மேபெக், AMG மற்றும் S-கிளாஸ் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக கிடைக்கிறது. இந்த வரையறுக்கப்பட்ட பதிப்பு 1000 எண்ணிக்கையில் மட்டும் உலகளவில் விற்பனைக்கு கிடைக்கும். இந்திய சந்தைக்கு கிராண்ட் பதிப்பின் 25 யூனிட் மட்டும் ஒதுக்கப்பட்டு விநியோகம் Q1 2024 முதல் தொடங்கும்.
G63 எஸ்யூவி காரில் 4.0-லிட்டர் பை டர்போ V8 இன்ஜின் 585 HP மற்றும் 850 Nm டார்க் வழங்குகிறது. இது 4.5 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும் மற்றும் அதிகபட்ச வேகம் மணிக்கு 220 கிமீ ஆகும்.
AMG லோகோ மற்றும் கலஹாரி கோல்ட் மேக்னோ ஃபினிஷில் உள்ள மெர்சிடிஸ் ஸ்டார் லோகோ ஆகியவற்றைக் காணலாம். பெர்ஃபார்மென்ஸ் பிராண்டின் அஃபால்டர்பாக் சின்னம் பானட்டில் பொறிக்கப்பட்டு கலஹாரி கோல்ட் மேக்னோ உள்ளது.
G 63 கிராண்ட் எடிஷனும் கருப்பு நிறத்திற்கு மாறாக முடிக்கப்பட்டுள்ளது. உட்புறம் தங்க நிறத்திலான இண்டிரியர் கருப்பு கதவு AMG சின்னத்துடன் வரவேற்கிறது. ஒளிரும் இன்ஷர்ட்டுகள் கொண்டுள்ளது.