இந்தியாவில் எலக்ட்ரிக் கார் சந்தையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள எம்ஜி காமெட் EV காரின் ரேஞ்சு சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 230 கிமீ வரை வழங்கும் என்பது உறுதியாகியுள்ளது. நிகழ்நேரத்தில் 150-170 கிமீ வரை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.
நவீன தலைமுறையினர் விரும்பும் வகையிலான பல்வேறு பாடி கிராபிக்ஸ் ஸ்டிக்கரிங் அம்சங்களுடன் டூயல் டோன் நிறங்களில் பச்சை நிறத்துடன் கருப்பு நிற கூறை, வெள்ளை நிறத்தில் கருப்பு நிற கூறை, சிங்கிள் டோனில் வெள்ளை, கருப்பு மற்றும் சில்வர் என மூன்று நிறங்கள் கிடைக்க உள்ளது.
MG Comet EV
சர்வதேச சந்தையில் கிடைக்கின்ற வூலிங் ஏர் எலக்ட்ரிக் காரை அடிப்படையாக கொண்ட இந்த காமெட் எலக்ட்ரிக் காரின் பரிமாணங்கள் 2974mm நீளம், 1505mm அகலம், 1640mm உயரம் மற்றும் 2010mm வீல்பேஸ் கொண்டுள்ளது.
டர்னிங் ஆரம் வெறும் 4.2 மீ ஆக உள்ளதால் நெரிசல் மிகுந்த பரபரப்பான சாலைகள் மற்றும் குறுகலான சாலைகளிலும் வாகனத்தை ஓட்டுவதற்கு இலகுவாக இருக்கும்.
MG Comet EV காரின் பவர் 42 PS மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்தும் 17.3 kWh பேட்டரி பேக் பெற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், கூடுதல் ரேஞ்சு வழங்கும் மாடல் சற்று தாமதமாக அறிமுகம் செய்யப்படலாம்.
3.3 kW சார்ஜர் வாயிலாக 10-80% சார்ஜ் பெற 5 மணிநேரமும், 0-100% சார்ஜ் பெற 7 மணிநேரமும் தேவைப்படும். முழுமையான சிங்கிள் சார்ஜில் 230 கிமீ தொலைவு பயணிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.
காமெட் EV காரின் டயர் அளவு 145/70 மற்றும் 12 அங்குல ஸ்டீல் வீல் பெற்று முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக்குகளும், பின்புறம் டிரம் பிரேக்குகளும் கிடைக்கும்.
பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை, IP67 பேட்டரி பேக், டூயல் ஏர்பேக், ABS + EBD, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, பின்புற பார்க்கிங் சென்சார், ஃபாலோ மீ ஹெட்லேம்ப், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், முன் மற்றும் பின்புற இருக்கை பெல்ட் நினைவூட்டல், டிரைவர் & கோ-டிரைவர் சீட் லோட் லிமிட்டர் போன்றவை உள்ளன.
2 கதவுகளை பெற்ற காரின் இன்டிரியரில் 4 இருக்கைகள் கொடுக்கப்பட்டு, இரு பிரிவுகளாக உள்ள 10.25-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கபட்டு, டிஜிட்டல் கிளஸ்டர் வசதியை கொண்டுள்ளது.
பலவேறு நவீனத்துவமான அம்சங்களில் மிக முக்கியமாக வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார் ப்ளே ஐ-ஸ்மார்ட் 55+ இணைக்கப்பட்ட காரில் 2 ஸ்பீக்கர்கள் புளூடூத் இசை & காலிங் ஸ்டீயரிங் மவுண்டட் ஆடியோ கட்டுப்பாடுகள் உள்ளன.
i-smart மூலம் 55க்கு மேற்பட்ட வசதிகளை எம்ஜி நிறுவனம் வழங்குகின்றது. அவற்றில், டிஜிட்டல் முறையில் இருவர் வாகனத்தின் கீ பகர்ந்து கொள்ளலாம், ரிமோட் கார் லாக்/அன்லாக், ஃபைண்ட் மை கார், ஸ்டேட்டஸ் செக் ஆன் ஆப், ஸ்டார்ட் அலாரம், ஜியோ-ஃபென்ஸ், தனிப்பயனாக்கக்கூடிய வேக வரம்புடன் கூடிய வாகன அதிவேக எச்சரிக்கை, ஸ்மார்ட் டிரைவ் தகவல், சார்ஜிங் ஸ்டேஷன் தேடல், ஐ-ஸ்மார்ட் பயன்பாட்டில் 100% சார்ஜிங் அறிவிப்பு ஆகிய வசதிகள் உள்ளன.
MG Comet EV விலை சுமார் ரூ.11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என எதிர்பார்க்கலாம்.
எம்ஜி காமெட் EV ரேஞ்சு & பேட்டரி திறன் எவ்வளவு ?
எம்ஜி மோட்டார் காமெட் EV காரின் ரேஞ்சு 230 கிமீ மற்றும் பேட்டரி திறன் 17.3 kWh ஆகும்.
MG காமெட் EV பவர் & டார்க் எவ்வளவு ?
காமெட் EV பவர் 42 PS மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்தும் 17.3 kWh பேட்டரி பேக் பெற்றுள்ளது.