இந்திய சந்தையில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டாரின் புதிய எம்ஜி செல்க்ட் டீலர்களின் முதல் மாடலாக வந்துள்ள M9 எம்பிவி ரக மாடலில் ஒற்றை Presidential Limo வேரியண்டின் விலை ரூ.69.90 லட்சம் எக்ஸ்-ஷோரூம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் ஆடம்பரமான வசதிகளை பெற்றதாக அமைந்துள்ள இந்த காரின் ரேஞ்ச் 548 கிமீ வரை வெளிப்படுத்தும் என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ள நிலையில் 90kWh பெரிய NMC பேட்டரி தரைதளத்தில் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக ர் 240 bhp பவர் and 350 Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் Normal, Eco, மற்றும் Sport என மூன்று டிரைவிங் மோட் உள்ளது.
சார்ஜிங் ஆப்ஷனை பொறுத்தவரை 160kW DC ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால் 0-100% பெற 90 நிமிடங்களும், 11kW AC சார்ஜர் வாயிலாக 10 மணி நேரத்தில் முழு சார்ஜ் பெறலாம்.
வெள்ளை, கருப்பு மற்றும் கிரே என மூன்று நிறங்களுடன் உள்ள எம்9ல் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் இருக்கையை மாற்றிக் கொள்ளும் வகையில் தன்மையை கொண்டுள்ளதால், இந்த இருக்கைகள் பற்றி எம்ஜி கூறுகையில் விமானங்களில் உள்ள ஃபர்ஸ்ட் கிளாஸ் இருக்கைகளை விட சிறப்பாக இருக்கும் என குறிப்பிடுகின்றது.
M9 காரில் லெவல் 2 ADAS, 7 ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா, ESP, EPB, TPMS, நான்கு டிஸ்க் பிரேக்குகள், ISOFIX, டிரைவரின் தூக்கத்தைக் கண்டறியும் டிரைவர் கண்காணிப்பு அமைப்பு என்றும், புகைபிடிக்கிறாரா இல்லையா என்பதையும் வழங்குகிறது.