ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் பிரேத்தியேகமான பிரீமியம் வாகனங்கள் எம்ஜி செலக்ட் டீலர் மூலம் விற்பனைக்கு வரவுள்ள முதல் மாடலாக M9 எலக்ட்ரிக் எம்பிவி ஜூலை 21 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
ஏற்கனவே நுட்பவிபரங்கள் உட்பட அனைத்து தகவல்களும் வெளியிடப்பட்டு முன்பதிவு நடைபெற்று வருகின்றது. குறிப்பாக நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களில் மட்டும் டீலர்கள் துவங்கப்பட்டுள்ள நிலையில் எம்9 மாடலை தொடர்ந்து ஸ்போர்ட்டிவ் எலக்ட்ரிக் சைபர்ஸ்டெர் வரவுள்ளது.
MG M9 பேட்டரி, ரேஞ்ச்
குறிப்பாக சந்தையில் உள்ள ICE ரகத்தில் கிடைக்கும் டொயோட்டா வெல்ஃபயர், கியா கார்னிவல் உள்ளிட்ட மாடல்களுக்கு சவால் விடுக்கும் வகையில் ஆடம்பரமான அனுபவத்தை வழங்குகின்ற எம்9 காரில் உள்ள 90kWh பெரிய NMC பேட்டரி தரைதளத்தில் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக ர் 240 bhp பவர் and 350 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 548 கிமீ ரேஞ்ச் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையான ரேஞ்ச் 450 கிமீ வரை வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வெள்ளை, கருப்பு மற்றும் கிரே என மூன்று நிறங்களை பெற்று வெளிப்புறத்தில் பிளவுப்பட்ட எல்இடி ஹெட்லைட், கூடுதலாக ஸ்லைடிங் முறையில் நகரும் பக்கவாட்டு கதவுகளை கொண்டு மிக உயரமான தோற்றத்தை வெளிப்படுத்தும் 19 அங்குல அலாய் வீலுடன் 5,200மிமீ நீளம், 2,000மிமீ அகலம் மற்றும் 1,800மிமீ உயரம் கொண்ட M9 வீல்பேஸ் 3,200மிமீ கொண்டது.
ஒற்றை வேரியண்டில் மட்டும் கிடைக்கின்ற எம்9 காரின் பின்புற இருக்கைகளில் மிகவும் ஆடம்பரமான பயணத்துக்கு ஏற்ற வகையிலான சொகுசான இருக்கைகள் உள்ளது. cognac brown என்ற நிறத்தை பெற்ற இன்டீரியரில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் இருக்கையை மாற்றிக் கொள்ளும் வகையில் தன்மையை கொண்டுள்ளதால், இந்த இருக்கைகள் பற்றி எம்ஜி கூறுகையில் விமானங்களில் உள்ள ஃபர்ஸ்ட் கிளாஸ் இருக்கைகளை விட சிறப்பாக இருக்கும் என குறிப்பிடுகின்றது.
மற்ற வசதிகளில் பனோரமிக் சன்ரூஃப், பல்வேறு நிறங்களை கொண்ட ஆம்பியன்ட் விளக்குகள், வயர்லெஸ் சார்ஜர்,, மூன்று டிரைவ் முறைகள், ஒரு டிஜிட்டல் IRVM மற்றும் ஒரு PM 2.5 ஏர் ஃபில்டர். ஒரு வாகனம்-க்கு-லோட் (V2L) மற்றும் வாகனம்-க்கு-வாகனம் (V2V) இணக்கத்தன்மை மற்றும் 55-லிட்டர் ஃப்ரங்க் ஆகியவையும் உள்ளன. பின்புறத்தில் உள்ள பூட்ஸ்பேஸ் பின் இருக்கைகளை ஸ்லைடிங் செய்தால் 1200 லிட்டருக்கு கூடுதலாக கிடைக்கும்.
M9 எலக்ட்ரிக் எம்பிவி பாதுகாப்பு
குறிப்பாக ஐரோப்பாவின் EURO NCAP மற்றும் ஆஸ்திரேலியாவின் NCAP ஆகியவற்றில் 5-நட்சத்திர மதிப்பீடு பெற்றுள்ள M9 காரில் லெவல் 2 ADAS, 7 ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா, ESP, EPB, TPMS, நான்கு டிஸ்க் பிரேக்குகள், ISOFIX, டிரைவரின் தூக்கத்தைக் கண்டறியும் டிரைவர் கண்காணிப்பு அமைப்பு என்றும், புகைபிடிக்கிறாரா இல்லையா என்பதையும் வழங்குகிறது.
இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்க உள்ள எம்ஜி எம்9 விலை ரூ.65 லட்சத்தில் துவங்கலாம்.