Categories: Car News

செப்டம்பர் 11ல் வின்ட்சர் இவி மாடலை விற்பனைக்கு வெளியிடும் எம்ஜி

mg cloud ev

ஜேஎஸ்டபிள்யூ மற்றும் எம்ஜி மோட்டார் கூட்டணி அமைத்த பின்னர் முதல் மாடலாகவும் எம் ஜி மோட்டாரின் மூன்றாவது எலக்ட்ரிக் மாடலாகவும் வின்ட்சர் இவி செப்டம்பர் 11ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்படுகின்றது.

சர்வதேச அளவில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் தாய் நிறுவனமான சீனாவின் SAIC கீழ் செயல்படுகின்ற Wuling நிறுவனம் ஏற்கனவே இந்த மாடலை சில நாடுகளில் கிளவுட் இவி என்ற பெயரில் 37.9Kwh மற்றும் 50.6kwh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை கொண்டு விற்பனை செய்து வருகின்றது.

இதில் குறைந்த திறன் பெற்ற 37.9kwh பேட்டரி பெற்ற மாடல் அதிகமாக 360 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்கலாம். அடுத்தபடியாக, டாப் வேரியண்டில் இடம்பெறப் போகின்ற 50.6kWh மாடல் 460 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐந்து இருக்கைகளுடன் மிகவும் தாராளமான இடவசதியை கொண்டிருக்கும். இந்த மாடலில் பின்புறத்தில் உள்ள இருக்கைக 135 டிகிரி வரை சாய் கோணத்தில் சாய்க்கும் வகையில் மிக தாராளமான சொகுசு அமைப்பை வெளிப்படுத்தும் ஏரோ லாஞ்சு இருக்கை அமைப்பினை பெற்றிருக்கின்றது இந்த பிரிவிற்கும் மற்றும் இந்திய சந்தைக்கு இந்த மாடல் இவ்வாறான பிசினஸ் கிளாஸ் பயணிகளுக்கு இணையான இருக்கையை கொடுப்பது இதுவே முதல் முறையாகும்.

மேலும் முன்பாக வெளியிடப்பட்ட பல்வேறு டீசர்கள் மூலம் இந்த காரின் முன்பக்கத்தில் எல்இடி ரன்னிங் விளக்குகள் எல்இடி ப்ராஜெக்டர் விளக்குகள் மற்றும் எல்இடி லைட் பார் போன்றவை எல்லாம் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது பின்புறத்திலும் எல்இடி டெயில் லைட் பெறுகின்றது. மிக நவீனத்துவமான இன்டீரியர் அமைப்புடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை இந்த இன்டீரியர் பெறும் என்பதனால் முழுமையான இணையம் சார்ந்த பல்வேறு டிஜிட்டல் அம்சங்களை எம்ஜி வின்ட்சர் இவி பெற்று இருக்கும்.

குறிப்பாக இந்நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற எம்ஜி காமெட் இவி மற்றும் ZS EV என இரண்டு மாடல்களுக்கு இடையில் நிலை நிறுத்தும் என்பதனால் விலை ரூபாய் 15 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Recent Posts

செப்டம்பர் 16ல் புதிய டிவிஎஸ் அப்பாச்சி RR 310R அறிமுகம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…

1 day ago

சென்னையில் ஃபோர்டு கார்களை தயாரிக்க ஜேஎஸ்டபிள்யூ கூட்டணி..?

அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…

1 day ago

செப்டம்பர் 16ல் கியா கார்னிவல் முன்பதிவு துவங்குகின்றது

வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…

1 day ago

மீண்டும் HF டான் பைக்கை வெளியிடும் ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…

1 day ago

புதிய கார்பன் ஃபைபர் பேட்டர்னில் 2024 யமஹா R15M விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…

2 days ago

மீண்டும் ஃபோர்டு இந்திய வருகை உறுதியானது..!

சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…

2 days ago