எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்த பிறகு முதல் மாடலாக வின்ட்சர் இவி ரூ.9.99 லட்சம் மற்றும் ஒரு கிமீ பேட்டரி பயன்பாடுக்கு ரூ.3.5 கட்டனமாக வசூலிக்கப்படுகிறது.
அக்டோபர் 3 முதல் முன்பதிவு துவங்கப்பட்டு அக்டோபர் 13ல் டெலிவரி வழங்கப்பட உள்ளது.
மிகவும் ஆடம்பரமான வசதிகள் பல்வேறு டிஜிட்டல் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்கள் என அதிநவீன அம்சங்களை புகுத்தியதாக விற்பனைக்கு வந்துள்ள இந்த ஐந்து இருக்கை கொண்ட மாடலில் மிகவும் தாராளமான இடவசதியை கொண்டு 2700 மிமீ வீல்பேஸ் கொடுக்கப்பட்டு பின் வரிசை இருக்கையில் அமருபவர்களுக்கும் மிகவும் தாராளமான இடவசதி கொண்டிருப்பதுடன் 135 டிகிரி கோணத்தில் சாய்க்கும் அளவில் ஏரோபிளேனில் உள்ளதை போன்றதாக வழங்கப்பட்டு பல்வேறு இணையம் சார்ந்த அம்சங்களை பயணிகள் பெறுவதற்கு ஏற்றதாக உள்ளது.
CUV எனப்படுகின்ற வடிவத்தை அடிப்படையாகக் கொண்ட எம்ஜி Windsor EV மாடல் முன்புறத்தில் எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட், முன்புறத்தில் ஒளிரும் வகையிலான எம்ஜி லோகோ, கிளாஸ் ஆன்டெனா மற்றும் எக்சைட் வேரியண்டில் 17 அங்குல ஸ்டீல் வீல், எக்ஸ்குளூசிவ் மற்றும் எசென்ஸ் என இரண்டிலும் 18 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல் பெற்றுள்ளது.
நைட் பிளாக் நிறத்தை கொண்ட இன்டீரியரில் இந்த மாடலில் பல்வேறு இடங்களில் ராயல் டச் கோல்ட் ஹைலைட்ஸ் ஆக கொடுக்கப்பட்டிருக்கின்றது. கூடுதலாக பேப்ரிக் சீட் அல்லது லெதர் சீட், 60: 40 ஸ்பிளிட் சீட், எல்இடி ஆம்பியண்ட் லைட் 256 நிறங்களில் கொண்டிருக்கின்றது.
10.1 அங்குல தொடுதிரை டிஜிட்டல் கிளஸ்டர் உடன் 15.6 அங்குல தொடுதிரை கிராண்ட் வியூ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார் பிளே ஆண்ட்ராய்டு ஆட்டோ பல்வேறு iSmart கார் டெக் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்கள் உள்ளன. 5 இருக்கை கொண்ட இந்த மாடலில் 604 லிட்டர் (579 லிட்டர் Essence) கொள்ளளவு கொண்ட பூட்ஸ்பேஸ் கொண்டுள்ளது.
பின்புறத்திலும் எல்இடி டெயில்லைட் ஆனது வழங்கப்பட்டு எம்பிவி ரக மாடல்களுக்கு உரித்தான டிசைன் அமைப்பினை கொண்டிருக்கின்றது.
136PS அல்லது 100KW பவர் வழங்கும் PMSM மோட்டார் பொருத்தி 200 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற வின்ட்சரில் 38Kwh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 331 கிமீ ரேஞ்ச் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.3 kW போர்டெபிள் சார்ஜிங் கேபிள், 3.3 kW AC வீட்டு சார்ஜர் பாக்ஸ் என இரண்டிலும் 0-100 % சார்ஜிங் பெற 13.8 மணி நேரமும் மற்றும் 7.4 kW AC விரைவு சார்ஜர் மூலம் 0-100% சார்ஜிங் பெற 6.5 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். மேலும் 45kw விரைவு சார்ஜரை ஆதரிக்கின்ற வகையில் உள்ள வின்ட்சர் இவி காருக்கு 0-50 % சார்ஜிங் பெற 55 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
அனைத்து வேரியண்டுகளிலும் 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி சரவுன்ட் வியூ மானிட்டர், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளது.
டிசம்பர் 31, 2024க்கு முன்பாக வின்டசர்.இவி வாங்குபவர்களுக்கு முதல் ஒரு வருடத்திற்கு முற்றிலும் இலவசமாக சார்ஜிங் மையங்களை அனுகலாம்.