ஜேஎஸ்டபி்யூ எம்ஜி நிறுவனத்தின் சிறப்பான வசதிகளுடன் கூடிய வின்ட்சர் இவி புரோ காரின் முன்பதிவு எண்ணிக்கை 8,000 யூனிட்டுகளை கடந்த நிலையில் ரூ.60,000 விலை உயர்த்தப்பட்டு ரூ.18,09,800 (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கூடுதலாக பேட்டரி வாடகை திட்டத்தில் வாங்குபவர்களுக்கு முன்பாக ரூ.12.50 லட்சத்திலிருந்து தற்பொழுது ரூ.13.09 லட்சம் கூடுதலாக கிமீ சார்ஜிங் கட்டணம் ரூ.4.50 காசுகள் வசூலிக்கப்பட உள்ளது.
விண்ட்சர் இவி புரோ பேட்டரி சிறப்புகள்
சந்தையில் உள்ள 38Kwh மாடலை விட கூடுதல் திறன் வாய்ந்த பேட்டரி பெற்றதாக வந்துள்ள விண்ட்சர் புரோ வேரியண்டில் 52.9kWh இடம்பெற்று 136PS அல்லது 100KW பவர் வழங்கும் PMSM மோட்டார் ஆனது 200 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 449 கிமீ (ARAI) வழங்கும் என கூறப்பட்டுள்ளது.
குறைந்த திறன் பேட்டரி மாடலை விட கூடுதலாக மாறுபட்ட நிறத்தை பெற்ற இன்டீரியருடன் 18 அங்குல அலாய் வீல் , 60kW DC வேகமான சார்ஜிங் ஆதரவு, V2V, V2L, லெவல் 2 ADAS, 6 ஏர்பேக்குகளுடன் பாதுகாப்பு வசதி ஆகியவற்றை பெற்றுள்ளது.
முதல் நாளிலே 8,000 முன்பதிவுகளை கடந்துள்ளதால் விலை உயர்வை எம்ஜி அறிவித்துள்ளது.