எம்ஜி ZS EV காரின் அறிய வேண்டிய முக்கிய சிறப்புகள்

mg zs ev car

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ZS EV காருக்கு முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் முதற்கட்டமாக 5 நகரங்களில் கிடைக்க துவங்கியுள்ளது. 340 கிமீ ரேஞ்சை சிங்கிள் சார்ஜில் தரவல்லதாக சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது முன்பதிவு நடந்து வருகின்ற டெல்லி, பெங்களூரு, ஹைத்திராபாத், மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் ரூ.50,000 புக்கிங் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. மேலும் முதல் 1000 வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு அறிமுக விலையும் அதன் பிறகு விலை உயர்த்தவும் எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பேட்டரி டெக்னாலாஜி

எம்ஜி ZS EV மாடலில் பொருத்தப்பட்டுள்ள 44.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்குடன் கூடிய மின்சார மோட்டார் அதிகபட்சமாக 143 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 350 என்எம் டார்க் வழங்குவதுடன், அதிகபட்சமாக 340 கிமீ தொலைவு பயணிக்கும் திறன் கொண்டதாக விளங்கும். 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 8.5 விநாடிகளை மட்டும் எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காருக்கு இணை விருப்பமாக 7.4 கிலோ வாட் சார்ஜர் வழங்குவதுடன் 15 ஆம்பியர் வீட்டு சார்ஜரலிலும் சார்ஜ் செய்யலாம். இந்த பேட்டரியை 7 kW AC சார்ஜர் மூலம் சார்ஜிங் செய்யும் போது அதிகபட்சமாக 7 மணி நேரமும், 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 80 சதவீத சார்ஜிங்கை வெறும் 40 நிமிடங்களில் மேற்கொள்ளும் திறனை கொண்டிருக்கும்.

எம்ஜி ஐஸ்மார்ட் 2.0 நுட்பத்தையும் இசட்எஸ் எலெக்ட்ரிக் பெற்ற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கொண்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு இணையம் சார்ந்த வசதிகளை ZS EV  காரில் பெற இயலும். இந்த காரில் வை-ஃபை, டாம்டாம் மேப் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

வாரண்டி

ஹெக்டருடன் அறிமுகப்படுத்தப்பட்ட எம்.ஜி. ஷீல்ட் பிரசாதத்தை உருவாக்கி, நிறுவனம் இஷீல்ட் என அழைக்கப்படும் ஒரு சிறப்பு முயற்சியை அறிவித்துள்ளது. தொகுப்பின் ஒரு பகுதியாக, ZS EV உரிமையாளர்களுக்கு வாகனத்தில் 5 ஆண்டு / வரம்பற்ற கிமீ உற்பத்தியாளர் உத்தரவாதமும், லித்தியம் அயன் பேட்டரியில் 8 ஆண்டு / 1,50,000 கிமீ உத்தரவாதமும் இலவசமாக வழங்கப்படும். இஷீல்ட் 5 வருட காலத்திற்கு 24×7 சாலையோர உதவிகளையும் (ஆர்எஸ்ஏ) உள்ளடக்கியது. தனி நபர் பயன்பாட்டுக்கு வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

 

எம்ஜி இசட்எஸ் இ.வி

எம்ஜி ZS EV காரின் விலை ரூ.23 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனவரி மாதம் இந்த காரின் விலை அறிவிக்கப்பட உள்ளது.

 

Exit mobile version