340 கிமீ ரேஞ்சு.., எம்ஜி ZS EV எஸ்யூவி காரின் முக்கிய சிறப்புகள்

mg zs ev

டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ள எம்ஜி ZS EV எஸ்யூவி மாடலில் இடம்பெற உள்ள முக்கிய அம்சங்களை அறிந்து கொள்ளலாம். இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற கோனா EV எஸ்யூவி காருக்கு போட்டியாக அமைய உள்ளது.

முன்பாக வெளிவந்த சில ஆவணங்களின் படி பெட்ரோல், ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் என மூன்று வெர்ஷனிலும் இசட்எஸ் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதற்கட்டமாக எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வரவுள்ளது.

எம்ஜி ZS EV மாடலில் பொருத்தப்பட்டுள்ள 44.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்குடன் கூடிய மின்சார மோட்டார் அதிகபட்சமாக 143 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 350 என்எம் டார்க் வழங்குவதுடன், NEDC சான்றிதழ் படி அதிகபட்சமாக 340 கிமீ தொலைவு பயணிக்கும் திறன் கொண்டதாக விளங்கும். இந்த பேட்டரியை 7kW AC சார்ஜர் மூலம் சார்ஜிங் செய்யும் போது அதிகபட்சமாக 7 மணி நேரமும், 50kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 80 சதவீத சார்ஜிங்கை வெறும் 40 நிமிடங்களில் மேற்கொள்ளும் திறனை கொண்டிருக்கும்.

இந்நிறுவனத்தின் முதல் ஹெக்டர் எஸ்யூவி காரில் இடம்பெற்றுள்ள இணைய சார்ந்த பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்ற எம்ஜி ஐஸ்மார்ட் நுட்பத்தையும் இசட்எஸ் மின்சார காரும் பெற உள்ளது. முதற்கட்டமாக இந்த கார் டெல்லி, மும்பை, அகமதாபாத், ஹைத்திராபாத் மற்றும் பெங்களூரு நகரங்களில் வெளியாகலாம். அடுத்த சில மாதங்களில் படிப்படியாக நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களில் விரிவுப்படுத்த வாய்ப்புகள் உள்ளது.

mg zs ev interior

இந்திய சந்தையில் உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு ஒருங்கிணைக்கப்பட உள்ளது. எம்ஜி ZS EV காரின் விலை ரூ.23 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. டிசம்பர் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த காரின் அறிமுகத்திற்கு பின்னர் தொடங்கப்படலாம்.

mg zs ev charging socket

zs ev