2024 கியா சொனெட் எஸ்யூவி படங்கள் வெளியானது

kia sonet fr

கியா மோட்டார் நிறுவனத்தின் 4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற சொனெட் எஸ்யூவி காரின் படங்கள் சீன சந்தையிலிருந்து வெளியாகியுள்ளது. முதன்முறையாக சீனாவில் விற்பனைக்கு வெளியாக உள்ள மாடல் இந்தியாவில் 2023 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2024 ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளியாகலாம்.

சொனெட் ஃபேஸ்லிஃப்ட் 4 மீட்டருக்கு குறைந்த காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் உள்ள டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, நிசான் மேக்னைட், ரெனோ கிகர் மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.

2024 Kia Sonet Facelift

2024 கியா சோனெட் எஸ்யூவி காரில் புதுப்பிக்கப்பட்ட புதிய ஹெட்லேம்ப் உடன் எல்இடி ரன்னிங் விளக்குகளுடன் புதிய பம்பர் சேர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கியா நிறுவனத்தின் பாரம்பரியமான டைகர் நோஸ் கிரில் பெற்று அகலமான ஏர் டேம் மற்றும் ஸ்கிட் பிளேட் பெறுகின்றது. பக்கவாட்டில், புதிய டூயல் டோன் அலாய் வால் கொண்டுள்ளது.

பின்புறத்தில் சொனெட் காரில் எல்இடி டெயில்லைட், டெயில்கேட்டில் எல்இடி லைட் பார், ரியர் பம்பர் மற்றும் புதிய ஒருங்கிணைந்த ஸ்பாய்லர் பெற்றுள்ளது.

இன்டிரியரில் சில மேம்பாடுகளை பெற்று புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டர், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை கொண்டதாக அமைந்திருக்கலாம்.

என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து, 83hp, 1.2-லிட்டர், 5-ஸ்பீடு மேனுவலுடன் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உள்ளது. 120ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 172 என்எம் டார்க் வழங்குவதுடன் 6 வேக ஐஎம்டி கியர்பாக்ஸ் மற்றும் 7 வேக டிசிடி மட்டுமே பெறுகின்றது.

1.5 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற மாடல் 100 ஹெச்பி பவர் மற்றும் 240 என்எம் டார்க் வழங்குவதுடன் fixed-geometry-turbo நுட்பத்தை கொண்டு 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. அடுத்தப்படியாக, 6 வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் மாடல் variable-geometry பெற்று 115 ஹெச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் வழங்குகின்றது.