ஜூலை 17 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள 2025 ஆம் ஆண்டிற்கான BMW 2 சீரிஸ் கிரான் கூபே மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. விற்பனைக்கு 218 M Sport Pro, 218 M Sport என இரு வேரியண்டுகள் கிடைக்க உள்ளது.
1.5 லிட்டர், 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இந்த காரின் 156hp மற்றும் 230Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் முன்புற வீல்களுக்கு பவரை எடுத்துச் செல்ல 8-வேக தானியங்கி கியர்பாக்ஸ் உள்ளது.
இன்டீரியரில் 10.7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்கிரீன் மற்றும் 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் டிரைவருக்கான தெளிவான பார்வைக்கு கிடைக்கும் வகையில் அமைந்து சமீபத்திய பிஎம்டபிள்யூ OS9 மென்பொருளில் இயங்குகின்றன.
மேம்பட்ட சஸ்பென்ஷன் தொழில்நுட்பம் மற்றும் புதுமையான டிரைவிங் மற்றும் பார்க்கிங் உதவி அமைப்புகள் சிறந்த ஓட்டும் அனுபவத்தை வழங்குவதுடன் 360-டிகிரி கேமரா, ADAS தொகுப்பு மற்றும் பூட்டு/திறத்தல், கேபின் முன்-குளிரூட்டும் முறை மற்றும் துவக்க அணுகல் போன்ற அடிப்படை செயல்பாடுகளை ரிமோட் கண்ட்ரோல் செய்ய அனுமதிக்கும் டிஜிட்டல் சாவி உள்ளது.
BMW குழுமத்தின் சென்னை ஆலையில் தயாரிக்கப்படுகின்ற காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ.1.50 லட்சம் வசூலிக்கப்படுகின்ற நிலையில், இந்நிறுவன டீலர்ஷிப்கள் மற்றும் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.