கூடுதலான வசதிகளை பெற்ற சிட்ரோயன் ஏர்கிராஸ் எக்ஸ் காரின் அறிமுக சலுகை மூலம் ரூ.8.29 லட்சம் முதல் ரூ.13.69 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு 5 மற்றும் 5+2 என இருவிதமான ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.
குறிப்பாக, ரூ.25,000 மதிப்புள்ள HALO 360 டிகிரி கேரா மேக்ஸ் டாப் வேரியண்டில் கட்டாய ஆக்செரீஸ் முறையில் சேர்க்கப்பட்டுள்ளது. மற்றபடி, சிட்ரோயனின் CARA அசிஸ்ட்னஸ் டாப் வேரியண்டை பதிவு செய்பவர்களுக்கு சிறப்பு சலுகை முறையில் இலவசமாக சில காலம் வழங்கப்பட உள்ளது.
Citroen Aircross X பெற்ற முக்கிய வசதிகள் விபரம்
இந்த புதிய ஏர்கிராஸ் எக்ஸ் எஸ்யூவி சமீபத்தில் பாரத் கிராஷ் டெஸ்டி 5 ஸ்டார் ரேட்டிங் பாதுகாப்பினை வயது வந்தோர் பிரிவில் பெற்றுள்ள நிலையில், பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் அடிப்படையாக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் , ஏபிஎஸ் உடன் இபிடி, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ISOFIX குழந்தை இருக்கை மவுண்ட்கள், TPMS பெற்றுள்ளது.
புதிய காரில் ஏற்கனவே பாசால்டில் இடம்பெற்றிருந்த CARA (Citroën Assistant with Remote Access) அசிஸ்டன்ஸ் மூலமாக AI சார்ந்தவற்றின் உதவியுடன் அழைப்புகள் மற்றும் அவசர கால உதவி, ஸ்மார்ட் ரிமைண்டர்ஸ், காலநிலை அறிக்கை, மேப்ஸ், நேவிகேஷன், வாகனங்களுக்கு நிகழ் நேர சப்போர்ட் என பல்வேறு அம்சங்களை பெற்றுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட டேஸ்போர்டின் டிசைனை பெற்று ஏர்கிராஸில் என்ஜின் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இல்லாமல் வழங்கப்படுகின்றது.
1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மட்டும் பெற்றிருந்த நிலையில் தற்போது 82 hp பவர் மற்றும் 115Nm டார்க் வெளிப்படுத்தும் எஞ்சினும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றுள்ளது.
110 PS பவர் மற்றும் 190Nm டார்க் வழங்குகின்ற 1.2 லிட்டர் ப்யூர்டெக் 110 டர்போ பெட்ரோல் என்ஜினில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கொண்டுள்ளது.
மற்ற வசதிகளில், எஞ்சின் இம்மொபைலைசர், வேக உணர்ந்து செயல்படும் ஆட்டோ டோர் லாக்குகள், அதிவேக எச்சரிக்கை அமைப்பு & பெரிமெட்ரிக் அலாரம் போன்றவை பெற உள்ளது.
இந்த காருக்கு போட்டியாக க்ரெட்டா, விக்டோரிஸ், எலிவேட் என பலவற்றை எதிர்கொள்ளும் நிலையில், தொடர்ந்து டீலர்களை சிட்ரோயன் விரிவுப்படுத்தவும், உதிரிபாகங்கள் மற்றும் சர்வீஸ் தொடர்பானவற்றை மேம்படுத்தினால் மிக சிறப்பான வரவேற்பினை சிட்ரோயன் ஏர்கிராஸ் X பெறக்கூடும்.
Aircross X Variant-wise Prices (Ex-showroom Price)
You | ₹ 829000 |
Plus | ₹ 977000 |
Turbo Plus 7S | ₹ 1137000 |
Turbo Max 7S | ₹ 1234500 |
Turbo Max Dual Tone 7S | ₹ 1254500 |
Turbo AT Max 7S | ₹ 1349100 |
Turbo AT Max Dual Tone 7S | ₹ 1369100 |