சிட்ரோயன் இந்தியா நிறுவனத்தின் புதிய C3 எஸ்யூவி வரிசையில் கூடுதலாக வந்துள்ள C3X காரில் க்ரூஸ் கண்ட்ரோல் உட்பட பல்வேறு நவீன அம்சங்களை பெற்றதாக விற்பனைக்கு ரூ.5,25,000 முதல் ரூ. 9,89,000 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்த சி3எக்ஸ் காரில் சிஎன்ஜி NA எஞ்சினில் மட்டும் ஆப்ஷனலாக பெற ரூ.93,000 , ஷைன் NA வேரியண்டில் 360 டிகிரி கேமரா பெற விரும்பினால் ரூ.25,000 கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும் என உறுதி செய்யப்படுள்ளது. தற்பொழுது முன்பதிவு துவங்கப்பட்டுள்ள இந்த மாடல்களின் விநியோகம் செப்டம்பர் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.
Citroen C3X சிறப்புகள்
தொடர்ந்து எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல், 1.2 லிட்டர் Puertech 82 NA எஞ்சின் அதிகபட்சமாக 82 PS பவர் மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது.
1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் Puretech 110 எஞ்சின் பவர் 110 PS மற்றும் 190 Nm டார்க் (205Nm டார்க்கினை ஆட்டோமேட்டிக்) வெளிப்படுத்துகின்றது. இதில் ஆறு வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
குறிப்பாக பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் சி3எக்ஸில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் , ஏபிஎஸ் உடன் இபிடி, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ISOFIX குழந்தை இருக்கை மவுண்ட்கள், TPMS, ஹாலோ 360-டிகிரி கேமரா, எஞ்சின் இம்மொபைலைசர், வேக உணர்ந்து செயல்படும் ஆட்டோ டோர் லாக்குகள், அதிவேக எச்சரிக்கை அமைப்பு & பெரிமெட்ரிக் அலாரம் போன்றவை பெற்றுள்ளது.
முந்தைய மாடலை விட மேம்பட்ட புதிதாக 15க்கு மேற்பட்ட நவீன அம்சங்களை சேர்க்கப்பட்டுள்ள இந்த காரில் 10.25 அங்குல சிட்ரோயன் கனெக்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவை கொண்டுள்ளது.
குறிப்பாக, கவனிக்க வேண்டிய வசதிகளில் எஞ்சின் புஸ் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப், க்ரூஸ் கண்ட்ரோல் வசதி, ஆட்டோ-டிம்மிங் இன்சைட் ரியர்வியூ மிரர் (IRVM), LED உட்புற விளக்குகள் மற்றும் பயணத்தின்போது வேகமாக சார்ஜ் செய்வதற்கான பின்புற USB டைப்-சி போர்ட், மேம்படுத்தப்பட்ட எல்இடி விளக்குகளை கொண்டு மிகவும் கவர்ச்சிகரமாக அமைந்துள்ளது.
Variant | Powertrain | New Price (INR) |
C3 X Shine Turbo AT | PureTech 110 DI-Turbo AT | 9,89,800 |
C3 X Shine Turbo | PureTech 110 DI-Turbo MT | 9,10,800 |
C3 X Shine NA Dual Tone | PureTech 82 MT | 8,05,800 |
C3 X Shine NA | PureTech 82 MT | 7,90,800 |
C3 Feel NA O | PureTech 82 MT | 7,27,000 |
C3 Feel NA | PureTech 82 MT | 6,23,000 |
C3 Live NA | PureTech 82 MT | 5,25,000 |
போலார் வெள்ளை, ஸ்டீல் கிரே, காஸ்மோ ப்ளூ, பெர்லா நேரா பிளாக் மற்றும் கார்னெட் ரெட் என 5 ஒற்றை வண்ணங்களுடன் போலார் வெள்ளை கூரையுடன் கூடிய காஸ்மோ ப்ளூ மற்றும் பெர்லா நேரா பிளாக் உடன் கார்னெட் ரெட் என இரண்டு டூயல் டோன் விருப்பங்களை பெற்றுள்ளது.
டாப் வேரியண்டில் மெட்ரோபொலிட்டன் லெதரெட்-ராப்டு ஐபி என்ற இன்டீரியருடன், C3 லைவ் – இன்ஜெக்டட் கிரே C3 ஃபீல் – அனோடைஸ்டு கிரே நிறங்களை கொண்டுள்ளது.