சமீபத்தில் முழுமையாக உற்பத்தியை எட்டிய ஹூண்டாய் அல்கசார் 2024 மாடல் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் படங்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக புதிய சிவப்பு நிறத்தை பெற்றதாக வரவுள்ள மாடல் கிரெட்டா எஸ்யூவி தோற்றத்தில் இருந்து மாறுபட்ட முன்பக்க டிசைன் மற்றும் ஹெட்லைட் பெறுகின்றது.
6 மற்றும் 7 இருக்கை பெற்றுள்ள அல்கசாரில் உள்ள இன்டிரியர் கிரெட்டாவை போலவே இரட்டை ஸ்கீரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்றிருக்கும். மற்றபடி என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினை பெறுகின்றது.
புதிய மாடல் அடிப்படையாகவே அனைத்து வேரியண்டிலும் 6 ஏர்பேக்குகளை பெற்று ஹில் ஹோல்டு, இஎஸ்பி உள்ளிட்ட அம்சங்களுடன் டாப் வேரியண்டுகளில் Level 2 ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெற வாய்ப்புள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஹூண்டாய் அல்கசார் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ.17 லட்சத்தில் துவங்கலாம். எனவே, இருப்பில் உள்ள 2023 அல்கசாரை விற்பனையை அதிகரிக்க அதிகபட்சமாக ரூ.85,000 வரை விலை தள்ளுபடியை ஜூலை 2024 மாதத்துக்கு ஹூண்டாய் அறிவித்துள்ளது.
இதுதவிர, இந்நிறுவனத்தின் டூஸான் MY23 மாடலுக்கு ரூ.2,00,000 சலுகை, MY24 மாடலுக்கு ரூ.50,000 வரை தள்ளுபடி, இதுதவிர எக்ஸ்டர் காருக்கு ரூ.10,000, வெனியூ, ஆரா மற்றும் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடல்களுக்கு ரூ.40,000 முதல் ரூ.55,000 வரை தள்ளுபடி கிடைக்கின்றது.
image source – youtube/ israilmalik piyala
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…