• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

விரைவில்.., புதிய ஹூண்டாய் ஐ20 விற்பனைக்கு அறிமுக விபரம்

by MR.Durai
19 October 2020, 12:14 pm
in Car News
0
ShareTweetSend

2020 hyundai i20

சர்வதேச அளவில் கிடைக்கின்ற புதிய ஹூண்டாய் ஐ20 இந்தியாவில் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. முன்பாக விற்பனை செய்யப்பட்டுள்ள மாடலை விட கூடுதலான வசதிகள் கொண்டதாக வரவுள்ளது.

புதிய ஐ20 காரில் Magna, Sportz, Asta, மற்றும் Asta (O) என நான்கு விதமான வேரியண்டில் மூன்று விதமான இன்ஜின் ஆப்ஷனுடன் 5 விதமான கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு மொத்தம் 13 வேரியண்டுகளில் கிடைக்கப் பெறலாம்.

ஹூண்டாய் ஐ20 காரில் இடம்பெற உள்ள அதே என்ஜினை கொண்டுள்ள வெனியூ காரிலும் உள்ளது. 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு 83 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்தும்.

அடுத்து 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 100 பிஹெச்பி மற்றும் 240 என்எம் டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இணைக்கப்பட உள்ளது. 120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். இந்த என்ஜினில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ மற்றும் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

தோற்ற அமைப்பில் முந்தைய மாடலை விட முற்றிலும் மாறுபட்ட முகப்பு கிரில் அமைப்பு, பம்பர் போன்றவற்றை கொண்டிருப்பதுடன் 16 அங்குல அலாய் வீல், 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் மவுன்டேட் ஆடியோ கன்ட்ரோல்ஸ், டூயல் ஏர்பேக், ரியர் ஏசி வென்ட்ஸ், எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டெயில் லைட் கொண்டிருப்பதுடன் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள பம்பரிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்பட உள்ள புதிய ஹூண்டாய் ஐ20 காரின் போட்டியாளர்களாக சுசூகி பலேனோ, டாடா அல்ட்ராஸ், டொயோட்டா கிளான்ஸா, மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்றவை விளங்க உள்ளது.

Web title : new Hyundai i20 launch very soon

Tags: Hyundai i20
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version