குறைந்த விலையில் டர்போ மாடல் போட்டியாளர்களை எதிர்கொள்ள வந்துள்ள ஹூண்டாய் வெனியூ ‘Executive வேரியண்டின் விலை ரூ.9.99 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
120 hp பவரை வெளிப்படுத்துகின்ற 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றதாக அமைந்துள்ள வென்யூ எக்ஸிகியூட்டிவ் வெளிப்புறத்தில், 215/60 R16 டயருடன் 16-இன்ச் டூயல் நிறத்தை பெற்றுள்ள சக்கரங்கள், முன் கிரில்லில் கருமை நிற குரோம் மற்றும் டெயில்கேட் மற்றும் ரூஃப் ரெயில்களில் ‘எக்ஸிகியூட்டிவ்’ பேட்ஜ் ஆனது பெற்றுள்ளது.
60:40 ஸ்பிலிட்-ஃபோல்டிங் பின்புற இருக்கைகள், 8.0 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் தொடுதிரை சிஸ்டத்துடன், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், க்ரூஸ் கண்ட்ரோல், பின்புற ஏசி வென்ட் மற்றும் பின்புற வைப்பர் உள்ளன.
120 PS பவரை வெளிப்படுத்துகின்ற 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது
172 Nm டார்க் உற்பத்தி செய்கின்றது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டிசிடி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
இந்த மாடலில் 6 ஏர்பேக்குகள், அனைத்து இருக்கைகளுக்கும் சீட் பெல்ட் ரிமைன்டர், டயர் பிரெஷர் மானிட்டர், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், ரியர்வியூ மிரர், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளது.
ஹூண்டாய் வென்யூ எக்ஸிகியூட்டிவ் மற்றும் S(O) டர்போ வகைகளின் விலை ரூ.9.99 லட்சம் முதல் ரூ. 11.86 லட்சம் வரை கிடைக்கின்றது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…