
இந்திய மட்டுமல்லாமல் உலகளவில் வெளியிடப்பட உள்ள புதிய தலைமுறை கியா செல்டோஸ் எஸ்யூவி, நாளை டிசம்பர் 10, 2025ல் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், விற்பனை மற்றும் விலை விபரம் ஜனவரி 2026 முதல் கிடைக்கலாம்.
வெளிப்புறத் தோற்றத்தில் மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது. முகப்புப் பகுதியில் புதிய வடிவிலான பம்பர்கள், கம்பீரமான கிரில் அமைப்புடன் எல்இடி பகல் நேர விளக்குகள் செங்குத்தாகவும், எல்இடி ஹெட்லைட் ஆகியவை காரின் தோற்றத்தை மேலும் மெருகூட்டுகின்றன. அதேபோல், பின்புறத்தில் முழுவதுமாக ஒளிரக்கூடிய எல்இடி விளக்குகள் மற்றும் புதிய அலாய் சக்கரங்கள் ஆகியவை இதற்கு ஒரு நவீன வடிவத்தைக் கொடுக்கின்றன.
இன்டீரியர் வசதிகளைப் பொருத்தவரை, கியா நிறுவனம் எப்போதும் தொழில்நுட்பத்தில் சமரசம் செய்வதில்லை. இந்த புதிய காரில் ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கான வசதிகள் வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இரண்டு வண்ணங்களில் அமைந்த இருக்கைகள், 12.3 அங்குல அளவுள்ள இரண்டு பெரிய திரைகள் உள்ளன.
1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளே இதிலும் தொடரும் என்று தெரிகிறது. இருப்பினும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களைக் கவரும் வகையில் புதிதாக ஒரு ‘ஹைப்ரிட்’ (Hybrid) இன்ஜின் தேர்வு அறிமுகப்படுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் சந்தையில் நிலவுகிறது.

