Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ரூ.4.89 லட்சத்தில் 2020 மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு வெளியானது

by automobiletamilan
February 18, 2020
in கார் செய்திகள்

maruti ignis

பிஎஸ் 6 என்ஜின் பல்வேறு மாற்றங்கள் கொண்ட புதிய மாருதி சுசுகி இக்னிஸ் காரை ரூபாய் 4.82 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.6,000 வரை விலை உயர்ந்துள்ளது.

1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான தரத்தில் வந்துள்ளது. இந்த என்ஜின் தற்போது ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ போன்றவற்றில் காணப்படுகிறது. 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக பவர் 83 ஹெச்பி மற்றும் 113 என்எம் டார்க் வெளிப்படுத்துகிறது. ஆனால் பிஎஸ்6 முறைக்கு மாற்றும்போது, பவரில் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இதன் கியர்பாக்ஸ் விருப்பங்களை பொறுத்தவரை 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் எனப்படகின்ற ஏஎம்டி கியருடன் சந்தையில் கிடைக்க துவங்கியுள்ளது. கடந்த வருடமே இந்த காரில் இடம்பெற்றிருந்த டீசல் என்ஜின் நீக்கப்பட்டு விட்டது.

குறிப்பாக காரின் இன்டிரியர் அமைபில் சிறிய அளவிலான ஸ்டைலிங் ட்விக்ஸ் செய்யப்பட்டு தொடர்ந்து முந்தைய மாடலில் உள்ளதை போன்ற பல்வேறு அம்சங்களை பெற்றிருக்கின்ற நிலையில், 7.0 அங்குல டச் ஸ்கீரின் பெற்ற மாருதியின் சமீபத்திய ஸ்மார்ட் பிளே ஸ்டுடியோ இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் நேவிகேஷன் மற்றும் வாய்ஸ் கமென்ட் வசதிகளை வழங்குகின்றது.

மாருதி சுசுகி இக்னிஸ் காரின் தோற்ற அமைப்பினை பொறுத்தவரை புதிய கிரில் வடிவமைப்பையும், புதிய முன் மற்றும் பின்புற பம்பர் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. பம்பர்களின் இருபக்கமும் ஸ்கஃப் பெற்றிருக்கின்றது.

புதிதாக லூசண்ட் ஆரஞ்சு மற்றும் டர்க்கைஸ் ப்ளூ நிறங்களை கொண்டுள்ளது. மூன்று புதிய டூயல் டோன் நிறங்களாக  கருப்பு நிறத்துடன் நெக்ஸா ப்ளூ, கருப்பு நிறத்துடன் லூசண்ட் ஆரஞ்சு மற்றும் சில்வர் நிறத்துடன் நெக்ஸா ப்ளூ ஆகியவற்றைப் பெற்றுள்ளது.

ignis

புதிய 2020 மாருதி இக்னிஸ் காரின் விலை ரூ.4.89 லட்சம் முதல் ரூ.7.20 லட்சம் வரை கிடைக்கின்றது. முழு விலை பட்டியல் அட்டவனையில்

Variant BS6 price BS4 price வித்தியாசம்
Sigma ரூ.4.89 லட்சம் ரூ.4.83 லட்சம் ரூ.6,000
Delta ரூ.5.67 லட்சம் ரூ.5.61 லட்சம் ரூ.6,000
Zeta ரூ.5.89 லட்சம் ரூ.5.83 லட்சம் ரூ. 6,000
Alpha ரூ.6.73 லட்சம் ரூ.6.67 லட்சம் ரூ.6,000
Delta AMT ரூ.6.14 லட்சம் ரூ.6.08 லட்சம் ரூ.6,000
Zeta AMT ரூ.6.36 லட்சம் ரூ.6.30 லட்சம் ரூ.6,000
Alpha AMT ரூ.7.20 லட்சம் ரூ.7.14 லட்சம் ரூ.6,000
Tags: Maruti Suzuki Ignisமாருதி இக்னிஸ்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version