இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள ADAS சார்ந்த பாதுகாப்புடன் 4X4 டிரைவ் பெற்ற மாருதி சுசுகி விக்டோரிஸ் எஸ்யூவி, பாரத் கிராஷ் டெஸ்ட் மையத்தால் சோதனை செய்யப்பட்டு 5 நட்சத்திர பாதுகாப்பினை பெற்றுள்ளதை உறுதி செய்துள்ளது.
அனைத்திலும் 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் பெற்று பெட்ரோல், மைல்டு ஹைபிரிட் , ஸ்டராங் ஹைபிரிட், சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் இ விட்டாரா என அனைத்து விதமான ஆப்ஷனிலும் கிடைக்க உள்ளது. குறிப்பாக சிஎன்ஜி ஆப்ஷனில் பூட்வசதியை பெற கேஸ் டேங்க் அடிப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.
Maruti Suzuki Victoris
விக்டோரிஸ் காரில் 1.5 லிட்டர் வழுவான ஹைபிரிட் ஆப்ஷனை பெற்று மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றுள்ள நிலையில் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு 103hp மற்றும் 136.8Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 2WD மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் இரண்டும் கிடைக்கின்றன, அதே நேரத்தில் 4WD மாடலில் ஆட்டோமேட்டிக் மட்டும் உள்ளது.
மாருதி விக்டோரிஸ் மைலேஜ் விபரம் பெட்ரோல் மேனுவல் 21.18 km/l (MT), ஆட்டோமேட்டிக் 21.06 km/l (AT) , ஆல் வீல் டிரைவ் 19.07 km/l (ALLGRIP AT) மற்றும் மேனுவல் சிஎன்ஜி 27.02 km/kg (MT S-CNG) இறுதியாக eCVT (Strong Hybrid) 28.65Km/l ஆகும்.
இன்டீரியரில் 10.25-இன்ச் முழு டிஜிட்டல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் அலெக்சா உதவியாளர், போக்குவரத்து மற்றும் வேக அங்கீகாரத்துடன் கூடிய சுஸுகி மேப்ஸ், எட்டு ஸ்பீக்கர்களுடன் கூடிய இன்ஃபினிட்டி x டால்பி அட்மாஸ் ஆடியோ, பனோரமிக் சன்ரூஃப், எட்டு வழி பவர்-அட்ஜஸ்டபிள் காற்றோட்டமான முன்பக்க இருக்கைகளை பெற்றுள்ளது.
விக்டோரிஸ் FWD மற்றும் 4WD என LXi, VXi, ZXi, ZXi (O), ZXi+, ZXi+ (O), ZXi+ 4WD, மற்றும் ZXi+(O) 4WD எட்டு வகைகளைப் பெறுகிறது, டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் 5MT, 6AT மற்றும் eCVT (Strong Hybrid) ஆகியவை அடங்கும். நான்கு டிரைவிங் மோடுகளும் சலுகையில் உள்ளன.
டீலர்கள் மற்றும் ஆன்லைனில் முன்பதிவு கட்டணமாக ரூ.11,000 வசூலிக்கப்படுகின்ற நிலையில் விலை நடப்பு மாத இறுதியில் வெளியாகலாம்.
விக்டோரிஸ் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் 100க்கு மேற்பட்ட நாடுகளுக்கு இதன் எலக்ட்ரிக் வெர்ஷன் இ-விட்டாரா போல ஏற்றுமதி செய்யவும் மாருதி சுசுகி திட்டமிட்டுள்ளது.