மாருதி ஃபிரான்க்ஸ் ரீபேட்ஜிங் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் காரில் 6 ஏர்பேக்குகளுடன் புதிய நிறத்துடன் விற்பனைக்கு ரூ.7.89 லட்சம் முதல் ரூ.13.19 லட்சம் எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய மாடலின் விலை ரூ.12,000 முதல் ரூ.28,000 வரை விலை அதிகரிக்கப்பட்டு புதிதாக கரு நீல நிறத்தை கொண்டுள்ளது.
2025 Toyota Taisor சிறப்புகள்
தற்பொழுது அனைத்து வேரிண்டுகளிலும் 6 ஏர்பேக்குகள் சேர்க்கப்பட்டு இஎஸ்பி, ஏபிஎஸ் உடன் இபிடி உள்ளிட்ட பல்வேறு அடிப்படையான பாதுகாப்புடன் இருக்கை பெல்ட் ரிமைன்டர் பெற்றதாக அமைந்துள்ளது.
மற்றபடி, டைசரில் தொடர்ந்து 90 hp பவர் மற்றும் 113 Nm டார்க் வழங்குகின்ற 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
சிஎன்ஜி பயன்முறையில் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்று 77.5hp பவர் மற்றும் 98.5Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.
1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 100hp பவர், மற்றும் 148 Nm டார்க் உற்பத்தி செய்கின்றது. இந்த மாடலில் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.