• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மார்ச் 16.., 2020 ஹோண்டா சிட்டி கார் அறிமுகம்

by MR.Durai
25 February 2020, 7:30 pm
in Car News
0
ShareTweetSend

020 ஹோண்டா சிட்டி கார்

வரும் மார்ச் 16 ஆம் தேதி இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விற்பனையில் உள்ள மாடலை விட முற்றிலும் மாறுபட்ட பல்வேறு வசதிகளை பெற்ற ஸ்டைலிஷான காராக விளங்க உள்ளது.

தற்போது விற்பனையில் கிடைத்து வருகின்ற மாடலை விட மாறுபட்ட தோற்ற அமைப்பினை பெற்று புதிய வசதிகளுடன் வரவுள்ள இந்த மாடல் முன்பாகவே தாய்லாந்தில் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது.

2020 ஹோண்டா சிட்டி காரின் நீளம் 100 மிமீ வரையும், அதே நேரத்தில் அகலம் 53 மிமீ அதிகரித்துள்ளது.  உயரம் இப்போது 28 மிமீ வரை குறைக்கப்பட்டுள்ளது, ஒட்டுமொத்த காரின் நீளம் அதிகரித்த போதிலும், ஹோண்டா சிட்டி காரின் வீல் பேஸ் 11 மிமீ வரை குறைக்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் மிக அகலமான க்ரோம் கிரில் வழங்கப்பட்டு எல்இடி ஹெட்லைட் உடன் எல்இடி ரன்னிங் விளக்குகளும் இணைக்கபட்டுள்ளது. பக்கவாட்டு தோற்ற அமைப்பில் 16 அங்குல அலாய் வீல், சன் ரூஃப் போன்றவற்றை கொண்டிருக்கும்.

இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு i-MMD எனப்படுகின்ற மைல்டு ஹைபிரிட் டெக்னாலாஜி உடன் இணைக்கப்பட உள்ளது. மேலும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினையும் பெற்றதாக விற்பனைக்கு கிடைக்கும்.

மார்ச் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள ஹோண்டா சிட்டி காரின் முன்பதிவு அன்றைய தினமே துவங்கப்பட உள்ளது.

Tags: Honda City
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version