நிசான் இந்தியாவின் பிரசத்தி பெற்ற மேக்னைட் எஸ்யூவி மாடலில் டீலர்கள் மூலம் சிஎன்ஜி மேனுவலில் பொருத்தி தரப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது ஏஎம்டி வேரியண்டுகளிலும் பொருத்திக் கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக சிஎன்ஜி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் முன்பாக எதிர்கொண்ட சிஎன்ஜி நிரப்பும் சிரமத்தை குறைக்கும் வகையில், தற்பொழுது மேக்னைட்டில், நிசான் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த எரிபொருள் நிரப்பும் வடிவமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது, இது பெட்ரோல் மற்றும் CNG வால்வுகள் இரண்டையும் ஒரே எரிபொருள் மூடியின் கீழ் கொண்டுள்ளது, இது முந்தைய எஞ்சின்-பே-மவுண்டட் CNG வால்விலிருந்து மாற்றமாகும்.
மற்றபடி, எவ்விதமான விலையில் எந்த மாற்றங்களும் இல்லாமல் ரெட்ரோஃபிட்மென்ட் கிட் இப்போது ₹71,999 விலையில் கிடைக்கிறது. இதற்கான வாரண்டி 3 ஆண்டுகள் அல்லது 1,00,000 கிமீ வரை வழங்கப்படுகின்றது. இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ள Motozen ஃப்யூவல் சிஸ்டம்ஸ் மூலம் இது பொருத்தி தரப்படுகின்றது.
தற்பொழுது நிசான் CNG திட்டம் இப்போது டெல்லி-NCR, மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட இந்தியா முழுவதும் 13 மாநிலங்களை உள்ளடக்கியது.