Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஜூலை 16-ல் புதிய நிசான் மேக்னைட் எஸ்யூவி அறிமுகமாகிறது

by MR.Durai
3 July 2020, 8:06 am
in Car News
0
ShareTweetSend
Nissan Magnite teased ahead of July 16 reveal
நிசான் மேக்னைட் டீசர்

4 மீட்டருக்கு குறைந்த நீளத்தைப் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக வரவுள்ள நிசான் மேக்னைட் எஸ்யூவி ஜூலை 16 ஆம் தேதி சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விற்பனைக்கு அனேகமாக நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் வெளியாகும்.

ஜப்பானிலிருந்து சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த எஸ்யூவி மாடல் ரெனோ-நிசான் கூட்டணியின் CMF-A பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டு 4 மீட்டருக்கு குறைவான நீளத்தை கொண்டு பல்வேறு புதிய வசதிகளுடன் பட்ஜெட் விலையில் நடுத்தர மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்பட உள்ளது. ரெனால்ட் நிறுவனத்தின் கைகெர் காம்பேக்ட் எஸ்யூவி மாடலும் நிசான் நிறுவன புதிய எஸ்யூவி மாடலும் பெரும்பாலான பாகங்களை பகிர்ந்து கொள்ள உள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசரில் நிசான் கிக்ஸ் காரில் உள்ளதை போன்ற எல்இடி ஹெட்லைட் மற்றும் எல் வடிவ ரனிங் விளக்குகள் டட்சன் ரெடி-கோ காரில் உள்ளதை போன்றும் அதன் முகப்பு கிரிலும் டட்சன் கிரிலுக்கு இணையாகவே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Nissan Magnite teased headlight
நிசான் மேக்னைட் ஹெட்லைட் டீசர்

மேக்னைட் மற்றும் கைகெர் எஸ்யூவி மாடலில் 95 hp பவரை வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம். இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற வாய்ப்புள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மாடலகளில் ஹூண்டாய் வென்யூ, விட்டாரா பிரெஸ்ஸா, எக்ஸ்யூவி 300, நெக்ஸான், ஈக்கோஸ்போர்ட் மற்றும் வரவுள்ள கியா சோனெட் எஸ்யூவி போன்றவற்றை எதிர்கொள்ளும் திறனுடன் மற்ற மாடல்களை விட விலை குறைவாக அமைந்திருக்கும். எனவே, நிசானின் மேக்னைட் வரும் 2021 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் விற்பனைக்கு ரூ.5.50 லட்சத்திற்குள் துவங்கலாம். அதே நேரத்தில் ரெனால்ட் கைகெர் விலை ரூ. 5.50 லட்சத்திற்கு கூடுதலாக அமைந்திருக்கலாம்.

Related Motor News

ஜிஎஸ்டி குறைப்பு.., ரூ.1 லட்சம் வரை நிசான் மேக்னைட் விலை குறைப்பு

மேக்னைட்டிற்கு 10 ஆண்டுகால வாரண்டியை வழங்கும் நிசான்

கருப்பு நிறத்தில் நிசானின் மேக்னைட் குரோ விற்பனைக்கு வெளியானது

GNCAP-ல் இந்திய நிசான் மேக்னைட் 5 ஸ்டார் ரேட்டிங் உண்மையா ?

சிஎன்ஜி ஆப்ஷனில் நிசான் மேக்னைட் எஸ்யூவி வெளியானது

ரெனால்ட் நிசான் இந்திய கூட்டு ஆலையை ரெனால்ட் கையகப்படுத்துகின்றது

Tags: Nissan Magnite
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

tata altroz 2025 bncap saftey ratings

BNCAP-ல் டாடாவின் அல்ட்ரோஸ் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்!

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

புதிய கருப்பு நிறத்தில் ஹோண்டா அமேஸ் கார் அறிமுகமானது

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

GNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசூகி விக்டோரிஸ்

வின்ஃபாஸ்ட் VF6 எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை

ரூ.2 லட்சம் வரை சிறப்பு சலுகையை அறிவித்த கியா இந்தியா

சிட்ரோயன் Basalt X காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ADAS பெற்ற டாடா நெக்ஸான்.EV விற்பனைக்கு ரூ.17.29 லட்சத்தில் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan